முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கிரிக்கெட் வாழ்க்கைக்கு பாண்டிங் குட்பை..!

செவ்வாய்க்கிழமை, 4 டிசம்பர் 2012      விளையாட்டு
Image Unavailable

 

பெர்த், டிச. 4 - தான் ஆடிய கடைசி டெஸ்ட் போட்டியில் 8 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார் ரிக்கி பாண்டிங். இத்தோடு அவர் கிரிக்கெட் வாழ்க்கைக்கு குட்பை சொல்லி விடைபெற்றார். ஆஸ்திரேலியாவின் முன்னணி கிரிக்கெட் வீரரும், சாதனை கேப்டனுமான ரிக்கி பாண்டிங் சமீபத்தில் தனது டெஸ்ட் கிரிக்கெட் ஓய்வை அறிவித்தார். ஏற்கனவே ஒரு நாள், டுவென்டி 20 கிரிக்கெட் போட்டிகளிலிருந்து விலகிய பாண்டிங் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கும் ஓய்வை அறிவித்தார்.

பெர்த்தில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியுடன் விடை பெறுவதாக அறிவித்திருந்தார் பாண்டிங். அதன்படி தற்போது அவர் விடை பெற்றுள்ளார்.

இந்த டெஸ்ட் போட்டியில் ரிக்கி பாண்டிங் சிறப்பாக ஆடவில்லை. இந்த நிலையில் தனது 2 வது இன்னிங்ஸில் பாண்டிங் 8 ரன்களுடன் ஆட்டமிழந்தார். இதையடுத்து மைதானத்தில் இருந்த தென் ஆப்பிரிக்க வீரர்கள் அனைவரும் கை தட்டியும், கை கொடுத்தும் ரிக்கி பாண்டிங்கை வழியனுப்பி வைத்தனர். மைதானத்தில் திரண்டிருந்தத ரசிகர்களும் எழுந்து நின்று பாண்டிங்குக்கு ஆதரவாக குரல் எழுப்பி பிரியாவிடை கொடுத்தனர்.

இந்த மாதத்தில் 38 வயதைத் தொடும் பாண்டிங் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வரலாற்றின் மிக முக்கியமான ஒரு வீரராக உருவெடுத்துள்ளார். அந்த அணியின் ஸ்டீவ் வாக் இதுவரை 168 டெஸ்ட் போட்டிகளில் ஆடியதே அதிகபட்ட ஆட்ட சாதனையாக இருந்தது. அதை பெர்த் டெஸ்ட்டுடன் சமன் செய்தார் பாண்டிங்.

டெஸ்ட் போட்டிகளில் 41 சதங்களைப் போட்டுள்ள பாண்டிங், டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன்களைக் குவித்த ஆஸ்திரேலிய வீரர் ஆவார். 168 டெஸ்ட் போட்டிகளில் அவர் 13,378 ரன்களைக் குவித்துள்ளார்.

ஒரு கேப்டனாக அதிக போட்டிகளை வென்ற ஒரே ஆஸ்திரேலிய கேப்டனும் பாண்டிங்தான். மொத்தம் 48 டெஸ்ட் போட்டிகளை அவர் கேப்டனாக வென்றெடுத்துள்ளார். மேலும் மொத்தம் 228 ஒரு நாள் போட்டிகளுக்குக் கேப்டனாக இருந்த பாண்டிங் அதில் 164 போட்டிகளில் வெற்றித் தேடிக் கொடுத்துள்ளார். 375 ஒரு நாள் போட்டிகளில் ஆடி 13,704 ரன்களைச் சேர்த்துள்ளார் பாண்டிங்.

கேப்டனாக பாண்டிங் இருந்த காலத்தில் பல ஜாம்பவான்கள் ஆஸ்திரேலிய கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார். ஷான் வார்ன், கிளன் மெக்கிராத், ஆடம் கில்கிறைஸ்ட், மாத்யூ ஹெய்டன், ஜஸ்டின் லாங்கர் என பெரிய பெரிய ஆட்டக்காரர்கள் அடுத்தடுத்து ஓய்வு பெறவே பாண்டிங் நிலை நிச்சயம் கஷ்டமானதாகவே இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்