முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியா - இங்கிலாந்து 3-வது டெஸ்ட் இன்று துவக்கம்

புதன்கிழமை, 5 டிசம்பர் 2012      விளையாட்டு
Image Unavailable

 

கொல்கத்தா, டிச. 5 - இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிக ளுக்கு இடையேயான 3-வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி கொல்கத்தாவில் இன்று துவங்க இருக்கிறது. இங்கிலாந்திற்கு எதிரான இந்த 3-வது டெஸ்டில் இந்திய அணி  வெற்றி பெ றுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத் தியில் எழுந்துள்ளது. 

கேப்டன் அலிஸ்டார் குக் தலைமையி லான இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு கேப்ட ன் தோனி தலைமையிலான அணிக்கு எதிராக விளையாடி வருகிறது. 

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிக ளுக்கு இடையே 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடந்து வருகிறது. இதில் ஏற்கனவே 2 டெஸ்டுகள் முடிந் து விட்டன . 

முன்னதாக ஐதராபாத்தில் நடைபெற்ற முதல் டெஸ்டில் இந்திய அணி 9 விக் கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று இந்தத் தொடரில் 1- 0 என்ற கண க்கில் முன்னிலை பெற்றது. 

அடுத்ததாக மும்பையில் நடைபெற்ற 2-வது டெஸ்டில் இங்கிலாந்து அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனால் இந்தத் தொடர் 1- 1 என்ற கணக்கில் சமனாகியுள்ளது. 

இந்நிலையில் இரு அணிகளுக்கு இடை யேயான 3 -வது டெஸ்ட் போட்டி கொல்கத்தாவில் உள்ள புகழ் பெற்ற ஈட ன் கார்டன் மைதானத்தில் இன்று துவ ங்குகிறது. 

கடந்த டெஸ்டில் இந்திய அணி தோல் வி அடைந்ததால் இந்த டெஸ்டில் வெ ற்றி பெற வேண்டிய அவசியம் ஏற்பட்டு உள்ளது. எனவே இந்திய அணி தற் போது நெருக்கடியில் உள்ளது. 

இந்தத் தொடரில் இந்திய அணி தரப்பி ல் புஜாரா அபாரமாக பேட்டிங் செய்து வருகிறார். அவர் முதல் மற்றும் இரண்டாவது டெஸ்டில் சதம் அடித்தார். 

தவிர சேவாக்கும் தன் பங்கிற்கு சதம் அடித்தார். மற்ற வீரர்கள் ஆட்டம் எடு படவில்லை. மும்பை டெஸ்டின் 2-வது இன்னிங்சில் காம்பீர் அரை சதம் அடி த்தார். 

இங்கிலாந்திற்கு எதிரான இந்தத் தொ டரில் சுழற்பந்து வீச்சைப் பொறுத்த வரை ஓஜா சிறப்பாக பந்து வீசி வருகிறார். அஸ்வின் அவருக்கு ஆதரவாக பந்து வீசி வருகிறார். 

கடந்த போட்டியில் 3-வது ஸ்பின்னரா க ஹர்பஜன் சேர்க்கப்பட்டார். ஆனால் அவரது பந்து வீச்சு எடுபடவில்லை. தவிர, ஜாஹிர்கான் மற்றும் யுவராஜ் சிங் ஆகியோர் தங்கள் பங்கிற்கு நன்கு பந்து வீசி வருகின்றனர். 

இங்கிலாந்து அணி முதல் டெஸ்டில் தடுமாறிய போதிலும் 2-வது டெஸ்டில் மீண்டு சிறப்பாக ஆடியது. சுழற் பந் தை சமாளித்து வெற்றி பெற முடியும் என்று நிரூபித்து உள்ளது. 

இங்கிலாந்து அணி தரப்பில் கேப்டன் குக் மற்றும் பீட்டர்சன் இருவரும் கடந் த டெஸ்டில் சிறப்பாக பேட்டிங் செய்து அணிக்கு முன்னிலை பெற்றுத் தந்த னர். 

முக்கியமாக பனேசர் மற்றும் ஸ்வான் இருவரும் கடந்த ஆட்டத்தில் இந்திய பேட்ஸ்மேன்களை திணற வைத்து வெ ற்றியும் பெற்றுத் தந்தனர். அவர்களுக்கு ஆதரவாக ஆண்டர்சன் பந்து வீசி வருகிறார். 

எனவே இந்தப் போட்டியில் இந்திய அணியின் பேட்ஸ்மேன்களும், பந்து வீச்சாளர்களும் ஒருங்கிணைந்து ஆடி னால் தான் வெற்றிக் கனி கிடைக்கும். 

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிக ள் சமபலம் வாய்ந்த அணிகளாகும். ஒட்டு மொத்தத்தில் இந்தப் போட்டி ரசிகர்களுக்கு நல்ல விருந்தாக இருக்கும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago