முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நடிகை புவனேஸ்வரி மீது குண்டர் சட்டம் பாய்கிறது

வெள்ளிக்கிழமை, 7 டிசம்பர் 2012      சினிமா
Image Unavailable

 

சென்னை, டிச.7 - நடிகை புவனேஸ்வரி மீது பல்வேறு புகார்கள் குவிந்து வருவதால்  குண்டர் சட்டத்தில் அவர் கைது செய்யப்படுகிறார். கடந்த மாதம் 26-ந் தேதி சென்னை அருகே கிழக்கு கடற்கரை சாலையில் திறந்தவெளி திரையரங்கில் நடிகை புவனேஸ்வரியும், வக்கீல் தாமோதர  கிருஷ்ணனும் குடித்து விட்டு ரகளையில் ஈடுபட்டனர். இச்சம்பவத்தில் குமார் என்பவரின் காரை உடைத்து , போலீசாரையும் தாக்கியுள்ளனர். இதைத் தொடர்ந்து பெங்களூருக்கு தப்பிச் செல்ல முயன்ற புவனேஸ்வரியை வேலூர் மாவட்டம், ஆம்பூர் அருகே துரத்திச் சென்று காரை வழிமறித்து போலீசார் கைது செய்தனர். இதைத் தொடர்ந்து புவனேஸ்வரி மீது பல்வேறு புகார்கள் வெளிவர தொடங்கியுள்ளன. 

சினிமா பட தயாரிப்பாளரும், பைனான்சியருமான அசோக் லோத்தாவிடம் ரூ.42 ஆயிரம், ரூ.30 ஆயிரம் என வாடகை பேசி  2 கார்களை புவனேஸ்வரி பயன்படுத்தி வந்துள்ளார். கார் வாடகைப் பணத்தை திருப்பி கேட்டதற்கு மிரட்டல் விடுத்துள்ளார். காரை திரும்ப கேட்டும் தர மறுத்துவிட்டார்.  இதுப்பற்றி பாண்டிபஜார் காவல் நிலையத்தில் அசோக் லோத்தா புகார் அளித்துள்ளார். மேலும் தனியார் தொலைக்காட்சிக்கு சீரியல் எடுப்பதில் பங்குதாரராக சேர்ப்பதாகவும் அசோக் லோத்தாவை நம்ப வைத்து ரூ.15 லட்சம் பெற்று புவனேஸ்வரி ஏமாற்றியது தொடர்பாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. 

மடிப்பாக்கத்தை சேர்ந்த விநாயகராஜ் என்பவரிடம் ரூ.13 லட்சம் மோசடி செய்ததாக மடிப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதில் என்னிடம் மாத வாடக்கைக்கு கார் எடுத்த வகையில் ரூ.9.20 லட்சம் தர வேண்டும்.அதை கேட்டபோது, என்னை தாக்க முயன்றார். எனது காரையும் அடித்து நொறுக்கினார் என்று கூறியுள்ளார். மேலும் அவரிடம் பிரபல தொலைக்காட்சி நிறுவனத்தில் தொடர் தயாரிப்பதற்கு ஒப்பந்தம் போட்டிருப்பதாக கூறி போலியான ஒப்பந்தம் ஒன்றை காட்டி ரூ.15 லட்சம் பணமும் பெற்றதாக குறிப்பிட்டுள்ளார்.   

கே.கே.நகரை சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் குருநாதன் என்பவரிடம் மோசடி செய்ததாக திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதில் பிரபல தொலைக்காட்சியில் டி.வி. சீரியல் தயாரிக்கப் போவதாக கூறி ரூ.1.50 கோடி வாங்கினார். சூட்டிங் நடைபெறும் இடம் என்று ஒரு பங்களாவையும் காட்டினார். ஆனால் சூட்டிங் எதுவும் நடத்தவில்லை. எனது பணத்தையும் தராமல் ஏமாற்றி விட்டார் என்று கூறியிருந்தார்.  

இதேபோன்று வடபழனியை சேர்ந்த குமார் என்பவர், டெலிவிஷன் சீரியலில் கதாநாயகனாக நடிக்க வைப்பதாக கூறி ரூ.40 லட்சம் மோசடி செய்ததாக வடபழனி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. போரூரை சேர்ந்த ஒரு பெண்ணிடம் ரூ.40 லட்சம் ஏமாற்றியதாக புகார் வந்துள்ளது. சினிமா படத் தயாரிப்பாளர் குமார் என்பவரிடமும் ரூ.10 லட்சம் மோசடி செய்ததாக புகார் கொடுத்துள்ளார்.  மன்னார் குடியை சேர்ந்த ஜெயமோகன் என்பவரிடம் ரூ.1.50 கோடியை புவனேஸ்வரி மோசடி செய்ததாக புகார் அளிப்பட்டுள்ளது.

இதுவரை 8 புகார்கள் புவனேஸ்வரி மீது வந்துள்ளதாக போலீஸ் வட்டாரத்தில் கூறப்படுகிறது. 2009 ஆம் ஆண்டில் விபசார தடுப்பு பிரிவில் ஒரு வழக்கில் தலைமறை வாகியது மற்றும் 18 குற்ற வழக்குகள் நிலுவையிலிருப்பது உள்ளிட்ட வழக்குகளில் போலீசார் நடவடிக்கை எடுக்க ஆலோசித்து வருகின்றனர். 

நடிகை புவனேஸ்வரி  8 மோசடி வழக்குகளில் கைது செய்யப்படுகிறார். இதைத் தொடர்ந்து அவரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் தலைமையில் போலீஸ் அதிகாரிகள் தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago