முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராஜஸ்தான் ராயல்சை வீழ்த்தி கொல்கத்தா வெற்றி

சனிக்கிழமை, 16 ஏப்ரல் 2011      விளையாட்டு
Image Unavailable

 

ஜெய்பூர், ஏப். 16 - இந்தியன் பிரீமியர் லீக் போட்டியில் ஜெய்பூரில் நடந்த லீக் ஆட்டத் தில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வீழ்த்தி இந்தத் தொடரில் முன்னிலை பெற்றுள்ளது. இந்தப் போட்டியில் கொல்கத்தா அணி தரப்பில், ஜாக்ஸ் காலிஸ் மற் றும் காம்பீர் இருவரும் அபாரமாக பேட்டிங் செய்து அணிக்கு வெற்றி தேடித் தந்தனர். இருவரது ஆட்டத்தால் அந்த அணி எளிதான வெற்றி யைப் பெற்றது. 

முன்னதாக பெளலிங்கின் போது, ஷாகிப் அல் ஹசன் மற்றும் யூசுப் பதான் இருவரும் நன்கு பந்து வீசி தலா 3 விக்கெட்டுகளை கைப்பற் றினர். இதில் பிரட்லீ, காலிஸ் மற்றும் பாலாஜி ஆகியோருக்கு விக்கெட் கிடைக்கவில்லை. 

ஐ.பி.எல். டி - 20 போட்டியில், ஜெய்பூரில் உள்ள சவாய் மான்சிங் அர ங்கத்தில் 12 - வது லீக் ஆட்டம் நடந்தது. இதில் ராஜஸ்தான் அணியும், பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் பலப்பரிட்சை நடத்தின. 

இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்னை எடுத்தது. அந்த ணி சார்பில், ஒரு வீரர்  கூட அரை சதத்தை எட்டவில்லை. ஆனால் 3 வீரர்கள் கால் சதத்தை எட்டினர். 

துவக்க வீரராக இறங்கிய டிராவிட் 34 பந்தில் 35 ரன்னை எடுத்தார். இதில் 4 பவுண்டரி அடக்கம். இறுதியில் அவர் யூசுப் பதான் வீசிய பந் தில் அவரிடமே கேட்ச் கொடுத்து வெளியேறினார். 

தவிர, டெய்லர் 25 பந்தில் 35 ரன்னையும், வாட்சன் 13 பந்தில் 22 ரன் னையும் எடுத்தனர். போத்தா 12 ரன்னை எடுத்து இறுதிவரை ஆட்டம் இழக்காமல் இருந்தார். துவக்க வீரர் பெளனிகார் 9 ரன்னில் ஆட்டம் இழந்தார். 

கொல்கத்தா நைட் அணி தரப்பில், யூசுப் பதான் 4 ரன்னைக் கொடுத் து 2 விக்கெட் எடுத்தார். ஷாகிப் அல் ஹசன் 31 ரன்னைக் கொடுத்து 2 விக்கெட் எடுத்தார். பிரட்லீ,காலிஸ் மற்றும் பாலாஜி ஆகியோருக்கு விக்கெட் கிடைக்கவில்லை. 

கொல்கத்தா அணி 160 ரன்னை எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற இலக்கை ராஜஸ்தான் அணி வைத்தது. அடுத்து களம் இறங்கிய அந்த ணி 18.3 ஓவரில் 1 விக்கெட் இழப்பிற்கு 160 ரன்னை எடுத்தது. 

இதனால் கொல்கத்தா அணி இந்த லீக் ஆட்டத்தில் 9 விக்கெட் வித்தி யாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் அந்த அணிக்கு கூடு தலாக 2 புள்ளிகள் கிடைத்துள்ளது. 

கொல்கத்தா நைட் அணி தரப்பில், காலிஸ் 65 பந்தில் 80 ரன்னை எடு த்து இறுதிவரை ஆட்டம் இழக்காமல் இருந்தார். இதில் 7 பவுண்டரி மற்றும் 2 சிக்சர் அடக்கம். கேப்டன் காம்பீர் 44 பந்தில் 75 ரன்னை எடு த்து இறுதிவரை களத்தில் இருந்தார். 

ராஜஸ்தான் அணி தரப்பில், எந்த ஒரு பெளலருக்கும் விக்கெட் கிடை க்கவில்லை. ஆட்டம் இழந்த ஒரு நபரும் ரன் அவுட் மூலம் ஆட்டம் இழந்தார். இந்தப் போட்டியின் ஆட்டநாயகனாக காம்பீர் தேர்வு செய்யப்பட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago