முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டென்னிஸ் வீரரின் சட்டை ரூ.7.5 லட்சத்திற்கு ஏலம்

சனிக்கிழமை, 8 டிசம்பர் 2012      விளையாட்டு
Image Unavailable

லண்டன், டிச.8 - இங்கிலாந்து டென்னிஸ் வீரர் அண்டிமுரே சமீபத்தில் பல வெற்றிகளை பெற்றார். இதனால் அவர் புகழ் மேலோங்கியது. விம்பிள்டன் வரலாற்றில் சுமார் 78 ஆண்டுகளுக்கு பிறகு இறுதிப்போட்டிக்குள் நுழைந்த இங்கிலாந்து வீரர் என்ற பெருமையை பெற்றார். லண்டன் ஒலிம்பிக்கில் தஙகப்பதக்கம் கைப்பற்றினார். அதன் பிறகு நடந்த அமெரிக்க ஓபன் போட்டியிலும் பட்டம் வென்றார். இதில் செர்பியாவின் நோவாக்ஜொகோவிக்கை எதிர்த்து ஆடினார். இந்த ஆட்டத்தின் போது இவர் அணிந்திருந்த டி-சர்ட்டை இப்போது ஏலத்திற்கு விட்டுள்ளனர். அப்போது 13,500 டாலருக்கு ஏலம் எடுக்கப்பட்டது. இதன் இந்திய மதிப்பு சுமார் ரூ.7.5 லட்சமாகும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்