முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னை ஓபன் டென்னிஸ் போட்டிகளை நடத்திட ரூ.2 கோடி நிதி

ஞாயிற்றுக்கிழமை, 9 டிசம்பர் 2012      விளையாட்டு
Image Unavailable

சென்னை, டிச.9 - தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா நேற்று முன்தினம் (7.12.2012)  தலைமைச் செயலகத்தில், 31.12.2012 முதல் 6.1.2013 வரை சென்னையில் நடைபெறவுள்ள சென்னை ஓபன் டென்னிஸ் விளையாட்டுப் போட்டிகள் நடத்திட தமிழக அரசின் பங்களிப்பாக இரண்டு கோடி ரூபாய்க்கான காசோலையினை தமிழ்நாடு டென்னிஸ் சங்கத் தலைவர்  எம்.ஏ.அழகப்பனிடம் வழங்கினார்.

அறிவார்ந்த ஆரோக்கியமான இளைய சமுதாயம் உருவாகிட கல்வி, விளையாட்டு ஆகிய இரண்டிலும் இளைஞர்கள் அதிக கவனம் செலுத்திட வேண்டும் என்ற உயரிய நோக்கில்  தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா தமிழகத்தில் விளையாட்டுத் துறைக்கு முன் எப்போதும் இல்லாத அளவில் முக்கியத்துவம் அளித்து வருகிறார். 

இதன் அடிப்படையில், டென்னிஸ் விளையாட்டில் தெற்காசியாவில் உலகப் புகழ் பெற்ற விளையாட்டு வீரர்கள் கலந்து கொள்ளும் மிக முக்கிய போட்டியான சென்னை ஓபன் டென்னிஸ் விளையாட்டுப் போட்டிகள் தமிழ்நாடு டென்னிஸ் சங்கத்தினால் ஆண்டுதோறும் சென்னையில் சர்வதேச தரத்திலுள்ள டென்னிஸ் விளையாட்டு அரங்கில் நடத்தப்பட்டு வருகின்றன. முதன் முறையாக 2005​ஆம் ஆண்டு தமிழ்நாடு முதலமைச்சர்  ஜெயலலிதா சென்னை ஓபன் டென்னிஸ் போட்டிகள் நடத்திட தமிழக அரசின் சார்பில் 1 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கினார்.  அதே போன்று கடந்த ஆண்டும் சென்னை ஓபன் டென்னிஸ் போட்டிகளை சிறப்பாக நடத்துவதற்கு தமிழக அரசின் சார்பில்  தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா 1 கோடி ரூபாய் வழங்கினார்.  

தமிழ்நாடு டென்னிஸ் சங்கம் 31.12.2012 முதல் 6.1.2013 வரை நடத்தவுள்ள சென்னை ஓபன் டென்னிஸ் விளையாட்டுப் போட்டிகளை சிறந்த முறையில் நடத்துவதற்கு 2 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கிடுமாறு தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதாவிடம் கோரிக்கை வைத்தது. 

அந்தக் கோரிக்கையை கனிவுடன் பரிசீலித்த  தமிழ்நாடு முதலமைச்சர்  ஜெயலலிதா மக்களின் பெரும் வரவேற்பினை பெற்று உலகின் தலைசிறந்த டென்னிஸ் வீரர்களும், இந்தியாவின் தலைசிறந்த டென்னிஸ் வீரர்களும் பங்கு கொள்ளும் சென்னை ஓபன் டென்னிஸ் விளையாட்டுப் போட்டிகளை  சிறந்த முறையில் நடத்துவதற்கு தமிழக அரசின் சார்பில் 2 கோடி ரூபாய் வழங்குவதற்கு உத்திரவிட்டிருந்தார். இந்தக் தொகைக்கான காசோலையினை தமிழ்நாடு டென்னிஸ் சங்கத் தலைவர் எம்.ஏ.அழகப்பனிடம் வழங்கி, இந்த டென்னிஸ் போட்டிகளை  சிறந்த முறையில் நடத்தி  தமிழகத்திற்கு பெருமை சேர்த்திட வேண்டும் என்ற தனது விருப்பத்தினைத் தெரிவித்துக் கொண்டார்.

இந்த நிகழ்வில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறைச் செயலாளர், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் உறுப்பினர் செயலர், தமிழ்நாடு டென்னிஸ் சங்கத்தின் கெளரவ செயலர்  ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago