முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெக்கான் சார்ஜர்ஸ் பெங்களூர் சேலஞ்சர்சை வீழ்த்தியது

வெள்ளிக்கிழமை, 15 ஏப்ரல் 2011      விளையாட்டு
Image Unavailable

ஐதராபாத், ஏப். 16 - இந்தியன் பிரீமியர் லீக் 20 -க்கு 20 போட்டியில் ஐதராபாத்தில் நடை பெற்ற லீக் ஆட்டத்தில் ஐதராபாத் டெக்கான் சார்ஜர்ஸ் அணி 33 ரன் வித்தியாசத்தில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியை வீழ்த்தி முன்னிலை பெற்றுள்ளது. இந்தப் போட்டியில் டெக்கான் சார்ஜர்ஸ் அணி தரப்பில், மிடில் ஆர் டர் பேட்ஸ்மேனான சிப்லி அபாரமாக ஆடி அரை சதம் அடித்தார். அவருக்குப் பக்கபலமாக கேப்டன் சங்கக்கரா, துவக்க வீரர் சோகல், டுமினி ஆகியோர் ஆடினர். 

பின்பு பெளலிங்கின் போது, முன்னணி வேகப் பந்து வீச்சாளர்களான ஸ்டெயின் மற்றும் கோனி இருவரும் அபாரமாக பந்து வீசி தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இஷாந்த் சர்மா, ஏ. சர்மா மற்றும் கிறிஸ்டியன் ஆகியோர் தலா ஒரு விக்கெட் எடுத்தனர். 

ஐ.பி.எல். டி - 20 போட்டியின் 11 -வது லீக் ஆட்டம் ஐதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச அரங்கத்தில் நடைபெற்றது. இதில் ஐத ராபாத் டெக்கான் சார்ஜர்ஸ் அணியும், பெங்களூர் ராயல் சேலஞ்சர் ஸ் அணியும் மோதின.

முன்னதாக இதில் டாசில் வெற்றி பெற்ற பெங்களூர் ராயல் சேலஞ்சர் ஸ் அணி பீல்டிங் செய்ய தீர்மானித்தது. டெக்கான் சார்பில், சோகல் மற்றும் எஸ். தவான் ஆகியோர் ஆட்டத்தை துவக்கினர். 

டெக்கான் அணி இறுதியில், 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு, 175 ரன்னை  எடுத்தது. அந்த அணி சார்பில், மிடில் ஆர்டர் பேட்ஸ்மே னான சிப்லி அபாரமாக ஆடி அரை சதம் அடித்தார். தவிர, 2 வீரர்கள் கால் சதம் அடித்தனர். 

டெக்கான் அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனான சிப்லி அதிகபட்சமகாக 35 பந்தில் 61 ரன்னை எடுத்து இறுதிவரை ஆட்டம் இழக்காம ல் இருந்தார். இதில், 5 பவுண்டரி மற்றும் 3 சிக்சர் அடக்கம்.  துவக்க வீரர் சோகல் 37 பந்தில் 38 ரன்னை எடுத்தார். இதில் 5 பவுண்டரி மற் றும் 1 சிக்சர் அடக்கம். கேப்டன் சங்கக்கரா 25 பந்தில் 36 ரன்னைஎடுத் தார். தவிர, டுமினி 15 பந்தில் 22 ரன்னையும், எஸ். தவான் 11 ரன்னையும் எடுத்தனர். 

பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி தரப்பில், முன்னணி வேகப் பந் து வீச்சாளரான ஜாஹிர்கான் 32 ரன்னைக் கொடுத்து 3 விக்கெட் எடுத் தார். தவிர, வான் டெர் வாத் மற்றும் நினன் ஆகியோர் தலா ஒரு விக் கெட் எடுத்தனர். 

பெங்களூர் ராயல் அணி 176 ரன்னை எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற இலக்கை டெக்கான் அணி வைத்தது. அடுத்து களம் இறங்கிய அந்த அணி 20 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 142 ரன்னை எடுத்தது. 

இதனால் ஐதராபாத் டெக்கான் சார்ஜர்ஸ் அணி இந்த லீக் ஆட்டத்தில் 33 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் அந்த ணிக்கு 2 புள்ளிகள் கிடைத்தது.   

பெங்களூர் அணி சார்பில், விராட் கோக்லி அதிகபட்சமகாக,  51 பந் தில் 71 ரன்னை எடுத்தார். இதில் 5 பவுண்டரி மற்றும் 3 சிக்சர் அடக்க ம். தவிர, புஜாரா 15 பந்தில் 25 ரன்னையும், அகர்வால் 13 பந்தில் 16 ரன்னையும் எடுத்தனர். 

டெக்கான் அணி தரப்பில், வேகப் பந்து வீச்சாளர் ஸ்டெயின் 24 ரன் னைக் கொடுத்து 3 விக்கெட் எடுத்தார். கோனி 31 ரன்னைக் கொடுத்து 3 விக்கெட் எடுத்தார். தவிர, இஷாந்த் சர்மா, கிறிஸ்டியன் மற்றும் ஏ. மிஸ்ரா ஆகியோர் தலா ஒரு விக்கெட் எடுத்தனர். இந்தப் போட்டியிந் ஆட்டநாயகனாக ஸ்டெயின் தேர்வு செய்யப்பட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்