முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜப்பானில் மீண்டும் நிலநடுக்கம் டோக்கியோ

வெள்ளிக்கிழமை, 15 ஏப்ரல் 2011      உலகம்

ஏப்.15-ஜப்பானில் நேற்று மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டதால் பலிடங்களில் கட்டிடங்களில் அதிர்வுகள் உணரப்பட்டன.

ஜப்பானின் வடகிழக்கு பகுதியில் கடந்த மாதம் 11ம் தேதி பூகம்பம் மற்றும் சுனாமி ஏற்பட்டதில் புகுஷிமா மற்றும் செண்டாய் நகரங்களில் 13 ஆயிரம் பேர் சிக்கி உயிரிழந்தனர் மேலும் 15 ஆயிரம் பேர் மாயமாயினர். ஜப்பானில் மீட்பு பணிகள் இன்னும் முடியாத நிலையில் கடந்த வாரம் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டதில் ரிக்டர் அளவுகோலில் 7.1 புள்ளியாக பதிவாகியது. அப்போது சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு பின்னர் வாபஸ் பெறப்பட்டது.
இந்நிலையில் அதே வடகிழக்கு பகுதியில் உள்ள மோரியாகோ, ஹான்சு தீவுக்கு கிழக்கில் 190 கி.மீ தொலைவில் கடலுக்கடியில் 11.2 கி.மீ ஆழத்தில் நேற்று காலை பூகம்பம் ஏற்பட்டது. இதனால் பல இடங்களில் கட்டிட அதிர்வுகள் உணரப்பட்டன. ஜபேபானில் வடகிழக்குப்பகுதியில் தொடர்ந்து நிலநடுக்கம் ஏற்பட்டுவருவதால் அப்பகுதியில் உள்ள மக்கள் பீதியடைந்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்