முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கேப்டன் பதவிக்கு தோனியே பொறுத்தமானவர்: அக்ரம்

வெள்ளிக்கிழமை, 14 டிசம்பர் 2012      விளையாட்டு
Image Unavailable

 

புதுடெல்லி, டிச. 14 - இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவிக்கு தோனியே மிகப் பொறுத்த மானவர் என்று பாகிஸ்தான் கிரிக்கெட அணியின் முன்னாள் கேப்டனான வா சிம் அக்ரம் தெரிவித்து இருக்கிறார். 

தோனியின் கேப்டன்ஷிப் திறமை குறி த்து சமீபத்தில் முன்னாள் வீரர்கள் பலர் விமர்சனம் தெரிவித்து உள்ளனர். இந்நி லையில் பாக். முன்னாள் வீரரான அக் ரம் அவருக்கு ஆதரவு தெரிவித்து இருக் கிறார். 

மேலும், இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவிக்கு தற்போதைய நிலை யில் தோனியே மிகப் பொறுத்தமானவர் என்றும், அவர் கேப்டன்ஷிப் யுக்தி களை மேலும் கூர் தீட்ட வேண்டும் என்றும் வாசிம் கூறியிருக்கிறார். 

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிக ளுக்கு இடையேயான டெஸ்ட் தொட ரில் இங்கிலாந்து அணி 2 - 1 என்ற கண க்கில் முன்னிலை பெற்று உள்ளது. 

இதனைத் தொடர்ந்து தோனியின் கே ப்டன்ஷிப் குறித்து பல்வேறு விமர்சனங்கள் வரத் துவங்கியுள்ளன. அவருக்குப் பதிலாக புதிய கேப்டனை நியமிக்க வேண்டும் என்றும், டெஸ்ட் அணிக்கு ஒரு கேப்டனும், ஒரு நாள் போட்டிக்கு ஒரு கேப்டனும் நியமிக்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்து ள்ளது. 

கொல்கத்தா போட்டியில் அஸ்வின் அதிசயம் நிகழ்த்துவார் என்று தோனி எதிர்பார்த்தார். ஆனால் அது நடக்கவி ல்லை. அதே போன்று தோனியும் இரு ப்பார் என்று எதிர்பார்க்கக் கூடாது. தோல்விக்கு தோனி மட்டும் காரணம் அல்ல. நிலைமை மோசமாகும் போ து, தோனியிடமும், இந்தியாவிடமும் மாற்று திட்டம் இல்லை என்றும் வாசி ம் தெரிவித்து இருக்கிறார். 

டெஸ்டுக்கு ஒரு கேப்டன், ஓரு நாள் போட்டிக்கு ஒரு கேப்டன் என்ற கொ ள்கையை அணி நிர்வாகம் விரும்பி னால் அது தோனிக்கு நெருக்கடியை சற்று குறைக்கும். இதனால் மாற்றம் செய்ய வேண்டிய அவசியம் இருக்கும். தோனிக்கு அடுத்த நிலையில் கோக்லி இருக்கிறார். ஆனால் அவர் இந்திய அணிக்கு தலைமை தாங்கும் அளவிற் கு முதிர்ச்சி பெறவில்லை என்றும் அக் ரம் கூறியிருக்கிறார். 

ராகுல் டிராவிட் மற்றும் வி.வி.எஸ். லக்ஷ்மண் ஆகியோரது ஓய்விற்குப் பிறகு, இந்திய அணி படிப்படியாக முன் னேறி வருகிறது. இந்நிலையில் மூத்த வீரரான டெண்டுல்கரின் மோசமான பார்ம் அணிக்கு கவலை அளிக்கிறது என்றும் வாசிம் தெரிவித்து இருக்கிறார். 

இந்திய அணியில் ஒட்டு மொத்த மாற்றம் செய்வதற்குப் பதிலாக ஒரு சில மாற்றத்தை தேர்வுக் குழுவினர் செய்து உள்ளனர். இது சரியான முடிவாகும். ஆனால் டெண்டுல்கரின் பார்ம் மற்று ம் எதிர்காலம் கவலை அளிக்கிறது என் றும் அக்ரம் கூறியிருக்கிறார். 

இங்கிலாந்திற்கு எதிரான 3 டெஸ்டில் வெறும் 4 விக்கெட் மட்டுமே ஜாஹிர் கான் கைப்பற்றி இருக்கிறார். எனவே அவரை 4 -வது டெஸ்டில் நீக்கியது நல் ல முடிவாகும் என்றும் வாசிம் குறிப் பிட்டு இருக்கிறார். 

கானிற்கு கேப்டன் தோனியின் ஆதரவு பகிரங்கமாக இருந்த போதிலும், இங் கிலாந்து வீரர்கள் அவரது பந்து வீச்சை சிரமமின்றி ஆடுகின்றனர். கான் சரி யான இடத்தில் தான் பந்து வீசுகிறார் என்று தோனி கூறுகிறார் என்றும் அக்ரம் தெரிவித்து இருக்கிறார். 

மேலும் என்னைப் பொறுத்தவரை ஜா ஹிர்கானின் உடற் தகுதியே முக்கிய பிரச்சினையாக உள்ளது. அவரது பந்து வீச்சில் வேகமில்லை. பாலோ த்ரோ வும் நன்றாக இல்லை. ஆனால் அதே நேரம் இங்கிலாந்து பெளலர்களான ஆண்டர்சன் மற்றும் பின் இருவரும் சிறப்பாக பந்து வீசி வருகிறார்கள். அவர் கள் சராசரியாக மணிக்கு 140 கி. மீ. வே கத்தில் பந்து வீசுகிறார்கள் என்றும் வா சிம் தெரிவித்து இருக்கிறார். 

ஜாஹிர்கானிற்கு உள்ள முக்கிய ஆயுத ம் ரிவர்ஸ் ஸ்விங்கிங் ஆகும். ஆனால் இது வேகமாக பந்து வீசினால் தான் உதவும். அவருக்கு 34 வயது ஆகி விட்டது. இளமை இன்னும் திரும்பாது. அவர் உள்நாட்டுப் போட்டிகளில் விளையாடி மேலும் தனது உடற்தகுதியை விருத்தி செய்தால் இன்னும் 2 ஆண்டு கள் இந்திய அணியில் நீடிக்கலாம் என் றும் அக்ரம் கூறியிருக்கிறார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்