முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜப்பானில் கதிர்வீச்சு பாதித்த குடும்பங்களுக்கு நஷ்ட ஈடு

சனிக்கிழமை, 16 ஏப்ரல் 2011      உலகம்
Image Unavailable

 

டோக்கியோ,ஏப்.17 - ஜப்பானில் கடந்த மாதம் பூகம்பமும், சுனாமியும் ஏற்பட்டது. இதில் 28 ஆயிரம் பேர் பலியானார்கள். இச்சம்பவத்தில் புகுஜிமா அணுமின் நிலையத்தில் உள்ள அணு உலைகள் வெடித்தன. இதனால் அணுக் கதிர்வீச்சு ஏற்பட்டது. எனவே புகுஜிமா அணு ஆலையில் இருந்து 20 கி.மீ தூரத்திற்கு குடியிருந்த மக்கள் வெளியேற்றப்பட்டனர். அதன்படி ஒரு லட்சம் மக்கள் வெளியேறினர். அதற்கு அடுத்தபடியாக 10 கி.மீ. தூரத்திற்குள் இருக்கும் மக்கள் வீட்டின் கதவுகளை திறக்காமல் இருக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டனர். 

கதிர்வீச்சு பாதிப்பு ஏற்பட்ட குடும்பங்களுக்கு தலா ரூ. 5.5. லட்சம் நஷ்ட ஈடு வழங்க ஜப்பான் அரசு முடிவு செய்துள்ளது. புகுஜிமா அணு உலையை சுற்றி 20 கி.மீ. சுற்றளவில் சுமார் 50 ஆயிரம் குடும்பங்கள் வசிக்கின்றன. அவர்களுக்கு ஜப்பான் பணத்தில் 5 ஆயிரம் கோடி யென் நஷ்ட ஈடு வழங்க முடிவு செய்துள்ளது. இத்தொகை இந்த மாத இறுதிக்குள் வழங்கப்படும். இதற்கிடையே வெடித்த அணு உலைகளில் இருந்து வெளியேறும் கதிர்வீச்சை கட்டுப்படுத்தும் பணியில் நிபுணர்கள் ஈடுபட்டுள்ளனர். இருந்தும் அங்கு வெளியாகும் கதிர்வீச்சின் அளவு அதிகரித்து வருகிறது. இந்த கதிர்வீச்சு பாதித்தால் உயிருக்கு ஆபத்து ஏற்படும் சூழ்நிலை உருவாகும். எனவே அணு உலையில் வேலை செய்யும் ஊழியர்களின் ஸ்டெம்செல்களை எடுத்து பாதுகாப்பாக சேமித்து வைக்க நடவடிக்கை எடுக்க மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்