முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புஸ்வானமாகிப் போனது மாயன் காலண்டர் பீதி!

ஞாயிற்றுக்கிழமை, 23 டிசம்பர் 2012      உலகம்
Image Unavailable

 

மெக்சிக்கோ,டிச,23  - இன்று முதல் புதிய சூரியன்... இது புதிய உலகம்... இதுதான் டிசம்பர் 22 ம் தேதி அதிகாலை மாயன் இனத்தவர்கள் பேசிய முதல் வார்த்தையாக இருந்தது. 2012 டிசம்பர் 21 ம் தேதி உலகம் அழிந்துவிடும் என்று கடந்த ஒரு வருடகாலமாக பீதி நிலவியது. இந்த அச்சத்திற்கு விடை கிடைக்கும் வகையில் இது வெறும் வதந்திதான். உலகம் அழியவில்லை என்று நம்பிக்கை பெருமூச்சு விட்டுள்ளனர் உலக மக்கள். 

தென் அமெரிக்க நாடான மெக்சிகோவில் ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மாயன்களின் காலண்டர் கி.மு. 3,113 ம் ஆண்டில் தொடங்கி கி.பி. 2012 ம் ஆண்டு டிசம்பர் 21 ம் தேதி அதாவது நேற்று முன்தினத்துடன் முடிவடைந்தது.  கவுதமாலாவிலுள்ள பழங்கால கல்வெட்டில் இந்த மாயன் காலண்டர் எழுதி வைக்கப்பட்டுள்ளது. எனவே 21 ம் தேதியுடன், உலகம் அழிந்து விடும் என்று பீதி கிளப்பி விடப்பட்டது. ஏராளமானோர் தற்கொலை செய்வார்கள், பெரிய அளவில் மின்தடை ஏற்படும், இயற்கை பேரழிவாக நிலநடுக்கம் போன்றவை ஏற்படலாம் என்றெல்லாம் பீதி ஏற்படுத்தப்பட்டது. அந்தநாளும் வரவே அச்சத்திலும் பீதியிலும் உறைந்த மக்கள் தங்களின் உறவினர்களுடன் விருந்துண்டு மகிழ்ந்தனர். கடைசி நாளை சந்தோசமாக கொண்டாடுவோம் என்று உலகம் முழுவதும் கொண்டாடித் தீர்த்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்