முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புளியம்பட்டியில் மறுவாக்குப்பதிவில் 93.21 சதவீத வாக்குப்பதிவானது

ஞாயிற்றுக்கிழமை, 17 ஏப்ரல் 2011      தமிழகம்
Image Unavailable

 

சங்கரன்கோவில்,ஏப் 17 - சங்கரன்கோவில் தொகுதி புளியம்பட்டியில் நேற்று மறுவாக்குப்பதிவுநடந்தது இதில் 93.21 சதவீத வாக்குகள் பதிவானது. இது கடந்த முறையை விட 15 ஓட்டுக்கள் அதிகமாகும்.

சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட புளியம்பட்டி வாக்கு சாவடியில் கடந்த 13 ந் தேதி நடைபெற்ற தேர்தலில் முறை கேடுகள் நடைபெற்றதாக சில திமுகவினரின் புகாரின் அடிப்படையில் நெல்லை மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயராமன் மறு தேர்தல் நடத்த உத்தரவிட்டார். அதோடு மட்டுமல்லாமல் முறைகேடுகளுக்கு துணை புரிந்ததாக கூறி வாக்குச்சாவடி அலுவலர்கள் 5 பேரை சஸ்பெண்ட் செய்தார். 

இதையடுத்து இந்த வாக்குச்சாவடியில் நேற்று காலை 8 மணிக்கு துவங்கியது. முதல் வாக்கை சட்டமன்ற உறுப்பினர் கருப்பசாமி வாக்களித்தார். இதன் பின்னர் பொதுமக்கள் வாக்களித்தனர். தமிழக வரலாற்றிலேயே இப்படி ஒரு பாதுகாப்பு போடப்பட்டதில்லை என்று சொல்லும் அளவுக்கு நெல்லை சரக டிஐஜி சண்முக ராஜேஸ்வரன் தலைமையில் எஸ்.பி.விஜேயந்திர பிதாரி,அதிரடிப்படையினர், துணைராணுவத்தினர் என வட்டாரத்தில் உள்ள அனைத்து காவல்துறையினரும் புளியம்பட்டியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் ஊரின் எல்லையில் செக்போஸ்ட் அமைக்கப்பட்டு எந்த ஒரு வாகனமும் ஊருக்குள் அனுமதிக்கப்படாமல் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளானார்கள்.

நேரம் அதிகரிக்க அதிகரிக்க வாக்குப்பதிவின் சதவீதமும் அதிகரித்து கொண்டே வந்தது. திகில் படங்களில் வருவது போல அனைத்து உளவுத்துறை அதிகாரிகள்,வருவாய்துறை அதிகாரிகளும் ஒவ்வொரு 15 நிமிடத்திற்கும் தங்கள் மேலிடத்திற்கு வாக்குப்பதிவு வாக்குப்பதிவு விபரங்களை அனுப்பிக்கொண்டே இருந்தனர்.

கடைசியில் 4 மணி முதல் 5 மணி வரை பெய்த கனமழையையும் பொருட்படுத்தாது ஆண்கள் 387 பேரும், பெண்கள் 410 பேரும் ஆக மொத்தம் 797 ஓட்டுக்கள் பதிவாயின.கடந்த முறை பதிவான வாக்குகளை விட 15 ஓட்டுக்கள் அதிகமாக பதிவாகி 93.21 சதவீதத்தை எட்டிப்பிடித்தது. கடந்த 13 ந் தேதி 91 சதவீத வாக்குகள் பதிவானது குறிப்பிடத்தக்கது. ஓட்டுப்பதிவுக்கு பின் வெளியே வந்த அப்சர்வர் தீரஜ்குமார் தற்பொழுது நடந்து முடிந்த ஓட்டுப்பதிவில் தனக்கு சந்தேகம் எதுவும் இல்லை என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago