முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்க புதிய வெளியுறவு அமைச்சர் ஜான் கெர்ரி

ஞாயிற்றுக்கிழமை, 23 டிசம்பர் 2012      உலகம்
Image Unavailable

 

வாஷிங்டன், டிச. 23 - அமெரிக்கா புதிய வெளியுறவுத்துறை செயலாளராக (அமைச்சர்) ஜான் கெர்ரியை, அதிபர் ஒபாமா அறிவித்தார். ஹிலாரி க்ளிண்டன் பதவி விலகுவதை தொடர்ந்து, ஜான் கெர்ரி தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

ஒபாமாவின் முதல் நான்காண்டு ஆட்சியில் ஹிலாரி கிளிண்டன் வெளியுறவுத் துறைச் செயலாளராக பணியாற்றி, உலக அளவில் பெரும் புகழ் பெற்றார். ஒபாமாவின் வலது கரமாக இருந்து உலக நாடுகளுடன் அமெரிக்காவின் உறவை வலுப்படுத்தினார். 2016 ம் ஆண்டு தேர்தலில் அதிபர் பதவிக்கு போட்டியிடுவதற்க்கு வசதியாக இரண்டாவது முறையாக ஹிலாரி பதவியில் தொடர விரும்பவில்லை என்று கருதப்படுகிறது. இந்நிலையில், அமைச்சரவையில் மிக முக்கியத்துவம் வாய்ந்த இந்த பதவிக்கு சரியான நபரை தேர்ந்தெடுக்க வேண்டிய பொறுப்பு ஒபாமாவுக்கு ஏற்பட்டது. தன்னை தேசிய அரசியலில் அறிமுகப்படுத்திய குரு ஜான் கெர்ரியை அவர் நேற்று முறைப்படி அறிவித்தார். 

வெளியுறவுத் துறை அதிகாரியின் மகனாக பிறந்த ஜான் கெர்ரி, துறை ஊழியர்கள் குடும்பத்தில் ஒருவராக அவர்களது கஷ்ட நஷ்டங்களை நன்றாக புரிந்து கொள்பவர். உலகம் முழுவதும் தொடர்புகள் கொண்ட, வெளியுறவுத் துறைக்காக பல்வேறு பணிகளை ஏற்கனவே சிறப்பாக செய்து முடித்தவர். சிறந்த செனட்டராகவும், வெளியுறவுத்துறை செனட்டர் குழுவின் தலைவராகவும் அரும் பணியாற்றியுள்ளார். முப்பது வருடங்களாக, வெளியுறவுத்துறை விவாதங்களில் அவருடைய பங்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த புதிய பதவியில் அவர் கற்றுக் கொள்ள வேண்டியது ஏதுமில்லை. மாறாக அவருடைய நீண்ட அனுபவம் இந்த பணிக்கு உறுதுணையாக இருக்கும் என்று கூறியுள்ளார் ஒபாமா. 

மேலும் வியட்நாம் போரின் முக்கிய தளபதியாக பணியாற்றிய ஜான், படைகளை சரியாக கையாள வேண்டிய அவசியத்தையும் உணர்ந்தவர். ஜனநாயகக் கட்சி மற்றும் குடியரசுகட்சிகளில், அரசியலுக்கு அப்பாற்பட்டு நண்பர்களை கொண்டவர். அவருடைய தேர்வுக்கு செனட் சபையின் ஒப்புதல் எளிதாக கிடைக்கும் என நம்புகிறேன் என்று ஒபாமா தெரிவித்தார். 

பதவியிலிருந்து விலகும் ஹிலாரி, ஜான் கெர்ரி மிகச்சரியான தேர்வு என்று கூறி வாழ்த்து தெரிவித்துள்ளார். வெளியுறவுத்துறைப் பணிகளில் என்னுடன் ஒன்றிணைந்து பணியாற்றிய ஜான் கெர்ரி, துறை அலுவலர்களுடனும் நல்லுறவு கொண்டவர். மிகவும் நம்பிக்கைக்குரியவர். ்ராக் போரை முடிவுக்கு கொண்டு வருவதிலும், போர் முடிந்த பிறகு ஆடிப்கானிஸ்தானில் அரசு அமைவதற்கும் கெர்ரி உறுதுணையாக இருந்தார். பெங்காஸி துயரச் சம்பவத்தின் மூலம் கற்றுக்கொண்ட அனுபவங்களை எனது குழுவினரிடம் அறிந்து. குறித்தான அனைத்து அரசியல், அரசாங்கம், ராணுவம் என பன்முனை அனுபவம் கொண்டவர் என்று தனது வாழ்த்துச் செய்தியில் ஹிலாரி கூறியுள்ளார். 

கொலோராடோ மாநிலம் டென்வர் நகரில், 1943 ஆம் ஆண்டு டிசம்பர் 11 ம் தேதி பிறந்தார் ஜான் கெர்ரி. தந்தை வெளியுறவுத்துறை அதிகாரி என்பதால், தனது குழந்தைப் பருவம் முழுவதும் வெளிநாடுகளிலேயே வளர்ந்தார். பெர்லின் மற்றும் சுவிஸ் பள்ளிகளில் பயின்றார். 1966 ஆம் ஆண்டு யேல் பல்கலைக் கழகத்தில் பட்டம் பெற்ற பிறகு வியட்நாம் போரில் லெடிப்டினன்டாக சேர்ந்தார். போரில் சிறப்பாக பணியாற்றி வெள்ளி, வெங்கல பதக்கங்களை பெற்றார். 1982 ஆம் ஆண்டு மசசூசெட்ஸ் மாநில லெடிப்டினன்ட் கவர்னராக அவரது அரசியல் வாழ்க்கை தொடங்கியது. இரண்டு ஆண்டுகள் கழித்து செனட் பதவிக்கு போட்டியிட்டு வென்றார். தொடர்ந்து ஐந்து தடவை செனட்டராக வெற்றி பெற்றுள்ளார். 

2004 ல் ஜார்ஜ் புஷ்ஷை எதிர்த்து போட்டியிட்டு தோல்வியுற்றார். அந்த தேர்தல் நேரத்தில்தான் ஜனநாயகக் கட்சி மாநாட்டில், ஒபாமாவுக்கு சிறப்புரை ஆற்றும் வாய்ப்பை வழங்கி தேசிய மேடை அமைத்துக் கொடுத்தார். அடுத்த தேர்தலிலேயே ஒபாமா அதிபர் ஆகிவிட்டது குறிப்பிடத்தக்கது. எதிர்நோக்கியுள்ள சவால்கள் சிரியா பிரச்சனை தான் ஜான் கெர்ரி முன் உள்ள மிகப்பெரிய விஷயமாக கருத்தப்படுகிறது. மேலும் ்ரான் அணுகுண்டு தயாரிப்பது, வட கொரியா உள்ளிட்ட பிரச்சனைகளையும் அவர் கையாள வேண்டியுள்ளது. மத்திய ஆசிய நாடுகள் தலைவர்களுடன் செல்வாக்கு பெற்றவராகவும், சிறந்த முறையில் பேரங்களை கையாள்வதில் அனுபவமும் கொண்ட கெர்ரியின் செயல்பாடுகளை அமெரிக்கா மட்டுமல்லாமல் உலகமே எதிர்ப்பார்க்கிறது. அதற்கு முன்னதாக, கெர்ரியின் தேர்வுக்கு அமெரிக்க செனட் சபையில் ஒப்புதல் கிடைக்க வேண்டியது அவசியமாகும். இரு கட்சியிலும் நண்பர்களைக் கொண்ட ஜான் கெர்ரி இந்த முதல் பரீட்சையில் எளிதாக வெற்றி பெறுவார் என்று எல்லோராலும் நம்பப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago