முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாகிஸ்தானில் குரானை அவமதித்த ஒருவர் கொலை

ஞாயிற்றுக்கிழமை, 23 டிசம்பர் 2012      உலகம்
Image Unavailable

 

ஹைதராபாத், டிச.23 - பாகிஸ்தானில்  காவல் நிலையத்தை உடைத்து, அங்கிருந்தவரை இழுத்து வந்த 200 பேர் கொண்ட  கும்பல்  தீ வைத்து எரித்தது. கொல்லப்பட்டவர் ஒரு பயணி. இவர்  மட்டுமே மசூதியில் தங்கி இருந்துள்ளார்.  சிந்து மாகாணத்தில், சீட்டா என்ற கிராமத்தில் இச்சம்பவம் நடந்துள்ளதாகவும், மறுநாள் பார்த்தபோது, அங்கு எரிந்த நிலையில் குரான் கிடந்ததாகவும்  இமாம் தெரிவித்தார்.

முதலில் இவரை கிராம மக்கள் தண்டித்த பின்னர் போலீஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். சில மணி நேரங்களுக்குப் பிறகு 200 பேர்  கொண்ட  ஒரு கும்பல் அங்கு வந்து  காவல் நிலையத்தைத் தாக்கி, அங்கிருந்தவரை வெளியே இழுத்து வந்து தீவைத்து எரித்துள்ளது. தாடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்ட் உஸ்மான் கனி இதைத் தெரிவித்தார்.

இந்த கொலை சம்பவம் தொடர்பாக 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பணியில் அஜாக்கிரதையாக இருந்ததாக 7 போலீஸார் பிடித்து வைக்கப்பட்டுள்ளனர். குரானை அவமதித்தது உள்பட பல சம்பவங்களில் 1990-ம் ஆண்டிலிருந்து 50 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்றும், அங்கு அடிக்கடி இவ்வாறு சம்பவங்கள் நடக்கும் என்றும்  ஆராய்ச்சி, பாதுகாப்பு மையம் தெரிவித்துள்ளது.

குரானை அவமதிப்பவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். ஆனால் அவர்களுக்கு மரண தண்டனை  வழங்கப்பட வேண்டும் என்று சட்டம் வரையறுக்கவில்லை.

இதுதொடர்பான வழக்குகளில் குற்றவாளிக்கு எதிகான ஆதாரங்களை வழக்குரைஞர்கள் தேடுவதில்லை. இஸ்லாமைப்பற்றி விவாதித்தல் , அதுபற்றி ஏதாவது எழுதுதல் சம்பந்தமாக பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஒரு சிறுமி வைத்திருந்த பையில் குரானைப் பற்றி தவறாகக் குறிப்பிடப்பட்டிருந்தது என்றும், அதை  கிறிஸ்தவர் ஒருவர்   வைத்திருந்தார் என்றும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது.            இந்த வழக்கு பின்னர் தள்ளுபடி செய்யப்பட்டது.  பாகிஸ்தானில்  இஸ்லாமிய விதிகளில் சீர்திருத்தம் கொண்டுவர வேண்டும் என்று கூறிய இருவர் அவர்களது பாதுகாவலரால் கொல்லப்பட்டனர்.   அவரைக் கொன்றவர் மீது ரோஜா இதழ்களை வழக்கறிஞர்கள் தூவினர். அவரைத் தண்டித்த நீதிபதி நாட்டை விட்டே விரட்டப்பட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்