முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாகிஸ்தானில் மனித வெடிகுண்டு தாக்குதலுக்கு மந்திரி பலி

திங்கட்கிழமை, 24 டிசம்பர் 2012      உலகம்
Image Unavailable

 

இஸ்லாமாபாத், டிச. 24 - பாகிஸ்தானில் தலிபான் தீவிரவாதிகள் நடத்திய மனித வெடிகுண்டு தாக்குதலில் மந்திரி பலியானார். பாகிஸ்தானில் வட மேற்கு பகுதியில் கைபர் பக்துன்கவா மாகாணம் உள்ளது. இங்குள்ள சுவாமி தேசிய கட்சியின் தலைவராக பஷீர் அகமது பிலூர் இருந்தார். இவர் அம்மாகாண மந்திரியாகவும் பதவி வகித்தார். இந்த நிலையில் பெஷாவரில் குயிசா கவானி பஜாரில் உள்ள தனது கட்சி அலுவலகத்தில் கூட்டம் நடத்தினார். அதில் ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டனர். கூட்டம் முடிந்ததும் கட்சி அலுவலகத்தை விட்டு வெளியே வந்தார். 

அப்போது கூட்டத்துக்குள் ஊடுருவி தீவிரவாதி தனது உடலில் கட்டியிருந்த குண்டை வெடிக்கச் செய்தான். இந்த தாக்குதலில் மந்திரி பஷீர் அகமது பிலுக்கு வயிறு மற்றும் மார்பு பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அவரை பெஷாவரில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இந்த தாக்குதலில் இவர் தவிர மேலும் 20 பேர் காயமடைந்தனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. 

இதற்கிடையே இந்த மனித குண்டு தாக்குதலுக்கு தலிபான் தீவிரவாதிகள் பொறுப்பு ஏற்றுள்ளனர். இந்த தகவலை தலிபான்களின் செய்தி தொடர்பாளர் இஷானுல்லா இஷா தெரிவித்துள்ளார். மந்திரி பலூர் எங்களது தாக்குதல் பட்டியலில் இருந்தார். அவரை கொல்ல நாங்கள்தான் மனித குண்டு அனுப்பினோம் என தெரிவித்துள்ளார். பிலுருக்கு ஏற்கனவே தீவிரவாதிகள் மிரட்டல் இருந்தது. அவர் நாட்டுக்காக தனது உயிரை தியாகம் செய்துள்ளார். இது போன்ற தாக்குதல்கள் மூலம் உண்மையை மறைக்க முடியாது. தொடர்ந்து தீவிரவாதத்தை தடுக்க போராடுவோம் என்று தகவல் துறை மந்திரி மியான் இப்திகார் உசேன் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்