முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆப்கான் தற்கொலை படை தாக்குதல்: 3 பேர் சாவு

வெள்ளிக்கிழமை, 28 டிசம்பர் 2012      உலகம்
Image Unavailable

 

கோஸ்ட், டிச.28 - ஆப்கானிஸ்தானில் அமெரிக்க முகாம் மீது, தலிபான் அமைப்பு புதன்கிழமை நடத்திய தற்கொலைப்படைத் தாக்குதலில் ஒரு போலீஸ்காரர் உள்பட 3 ஆப்கானியர்கள் உயிரிழந்தனர். கோஸ்ட் பகுதியில் உள்ள அமெரிக்க முகாமின் நுழைவாயில் அருகே, காரில் வந்த ஒருவர் வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்து, தாக்குதல் நடத்தியதில் 3 பேர் உயிரிழந்தனர். 7 பேர் காயமடைந்தனர் என்று ஆப்கானிஸ்தான் உள்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் 

தெரிவித்தார். நேட்டோ சர்வதேச பாதுகாப்பு உதவிப் படை செய்தித் தொடர்பாளர் மார்ட்டின் ஓ டன்னலும் இதனை உறுதிப்படுத்தியுள்ளார். தலிபான் செய்தித் தொடர்பாளர் சபியுல்லா முஜாகித், ஊடகங்களுக்கு அனுப்பியுள்ள மின்னஞ்சலில், `இத்தாக்குதலுக்கு தலிபான் அமைப்பு பொறுப்பேற்கிறது. கோஸ்ட் பகுதியைச் சேர்ந்த  ஒமர் என்பவர் இத்தாக்குதலில் ஈடுபட்டார்' என்று தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்