முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வெங்காய ஏற்றுமதிக்கு அனுமதி - சரத்பவார் அறிவப்பு

திங்கட்கிழமை, 21 பெப்ரவரி 2011      வர்த்தகம்
Image Unavailable

புதுடெல்லி,பிப்.11  - வெங்காய ஏற்றுமதிக்கு மீண்டும் அனுமதி கொடுக்கப்படும் என்று மத்திய விவசாயத்துறைஅமைச்சர் சரத்பவார் அறிவித்துள்ளார். இந்தாண்டு தென்மேற்கு பருவமழை நவம்பர் மாதம் வரை நீடித்தது. null இதனால் வெங்காயம் அதிகம் விளையும் மகாராஷ்டிரம்,தமிழகம் உள்பட பல மாநிலங்களில் வெங்காய பயிர் அழிந்துவிட்டது. இதனால் வெங்காய உற்பத்தி குறைந்து இந்திய வரலாற்றில் இல்லாத அளவுக்கு விலை ஏறிவிட்டது. ஒரு கிலோ வெங்காயம் விலை ரூ. 90 வரை அதிகரித்துவிட்டது. நவம்பரில் மழை அதிகமாக பெய்கிறது என்று தெரிந்தவுடன் வெங்காய வரத்தை அதிகரிக்க வெளிநாடுகளில் இருந்து இறக்குமதிக்கு மத்திய அரசு ஏற்பாடு செய்திருக்க வேண்டும். ஆனால் காலதாமதமாக நடவடிக்கை எடுத்ததால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இதனையொட்டி வெங்காய ஏற்றுமதிக்கு தடை விதித்ததோடு பாகிஸ்தானில் இருந்து வெங்காய இறக்குமதிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. முதலில் அனுமதி கொடுத்த பாகிஸ்தான் அரசு,லாரிகளில் வெங்காயத்தை ஏற்றி தரைவழியாக செல்ல தடை விதித்தது.null இதனால் பாகிஸ்தான் வெங்காய வியாபாரிகளும் பாதிக்கப்பட்டனர். இந்த நிலையில் வெங்காய உற்பத்தியானது உள்நாட்டில் அதிகரித்து சந்தைக்கு வரத்தொடங்கிவிட்டது. இதனால்  நாசிக்கில் வெங்காயத்தின் விலை ரூ.80-ல் இருந்து வெறும் 2 ஆக குறைந்தது. இதனால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதை தடுக்கும் வகையில் வெங்காய ஏற்றுமதிக்கு மீண்டும் அனுமதி கொடுக்கப்படும் என்று மத்திய விவசாயத்துறை அமைச்சர் சரத்பவார் அறிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்