முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெல்லி மாணவி மரணத்திற்கு அமெரிக்க இந்தியர்கள் இரங்கல்

ஞாயிற்றுக்கிழமை, 30 டிசம்பர் 2012      இந்தியா
Image Unavailable

 

வாஷிங்டன், டிச. 31 - டெல்லியில் பலாத்காரக் கொடுமையில் சிக்கி உயிருக்குப் போராடி உயிரிழந்த மருத்துவ மாணவியின் மறைவுக்கு அமெரிக்காவில் வசித்து வரும் இந்தியர்கள் இரங்கல் தெரிவித்தனர்.

கடும் குளிரையும் பொருட்படுத்தாமல், தலைநகர் வாஷிங்டனில் உள்ள காந்தி சிலை முன்பு இந்தியர்கள் பெரும் திரளாக கூடினர். பின்னர் மெழுகுவர்த்திகளை கையில் ஏந்திய படி மரணமடைந்த மாணவிக்கு அஞ்சலி செலுத்தினர். இரங்கல் கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவருமே இந்த செயலை கடுமையாகக் கண்டித்துக் கருத்து தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்