முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஓட்டு எண்ணிக்கையை உடனே நடத்த மதுரை ஆதீனம் கோரிக்கை

புதன்கிழமை, 20 ஏப்ரல் 2011      தமிழகம்
Image Unavailable

மதுரை, ஏப்.20 - பலவிதமான குழப்பங்களை தவிர்த்திட ஓட்டு எண்ணிக்கையை உடனே நடத்தி வேண்டும் என மதுரை ஆதீனம் கோரியுள்ளார்.இதுகுறித்து மதுரை ஆதீனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தேர்தல் ஆணையம் சிறப்பான வகையில் விதிமுறைகளை கடைபிடித்து தேர்தலை வெகுசிறப்பாக நடத்தியது. இதற்காக தேர்தல் ஆணையத்தை பாராட்டுகிறேன். அதே நேரத்தில் வாக்கு எண்ணிக்கையை ஒரு மாத கால அளவு தள்ளிவைத்தது சரியானது அல்ல என்பது எமது கருத்து. தேர்தல் முடிவை உடனடியாக அறிவித்தால் மற்ற மாநிலங்களில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது சரியானது அல்ல. தேர்தல் முடிவை தள்ளிவைப்பது பல்வேறு குழப்பங்களை ஏற்படுத்துகிறது என்பதால் இந்த முடிவை எந்த சூழ்நிலையில் எடுத்து இருந்தாலும் அதனை மாற்றிக்கொண்டு வாக்கு எண்ணிக்கையை விரைவாக துவங்கி முடிவுகளை அறிவித்தால் எல்லோருக்கும் நல்லது என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். தேர்தல் ஆணையத்திற்கு முழு அதிகாரம் இருப்பதால் தயக்கமின்றி வாக்கு எண்ணிக்கையை உடனடியாக தொடங்க அனைத்து ஏற்பாடுகளையும் விரைந்து செய்து நாட்டு மக்களின் நலன் காக்க கேட்டுக்கெள்கிறேன் இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்