முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜான் டேவிட்டுக்கு தண்டனையை உறுதி செய்தது சுப்ரீம் கோர்ட்

புதன்கிழமை, 20 ஏப்ரல் 2011      தமிழகம்
Image Unavailable

புதுடெல்லி,ஏப்.21 - ராகிங் கொடுமையால் கல்லூரி மாணவர் நாவரசு படுகொலை செய்யப்பட்ட வழக்கில் சீனியர் மாணவர் ஜான் டேவிட்டை விடுதலை செய்து சென்னை ஐகோர்ட் அளித்த தீர்ப்பை சுப்ரீம் கோர்ட் நேற்று ரத்து செய்து கடலூர் செஷன்ஸ் கோர்ட் அளித்த இரட்டை ஆயுள் தண்டனையை சுப்ரீம் கோர்ட் உறுதி செய்தது. 

சென்னை பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பொன்னுச்சாமியின் மகன் நாவரசு. இவர் சிதம்பரம் முத்தையா மருத்துவக்கல்லூரியில் எம்.பி.பி.எஸ் முதலாம் ஆண்டு படித்துக்கொண்டிருக்கும்போது 1996-ல் சீனியர் மாணவர் ஜான் டேவிட்டால் படுகொலை செய்யப்பட்டு அவரது உடல் துண்டு துண்டாக வெட்டப்பட்டு பஸ்சில் அனுப்பப் பட்டுள்ளது. இந்த கொடூர சம்பவம் தமிழகத்தில் மட்டுமின்றி நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதன் பிறகே கல்லூரிகளில் ராக்கிங் தடை செய்யப்பட்டது. நாவரசு கொலை வழக்கை விசாரித்த கடலூர் செசன்ஸ் நீதிமன்றம் ஜான் டேவிட்டுக்கு இரட்டை ஆயுள் தண்டனையும் ரூ.1 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது. இதனை எதிர்த்து ஜான் டேவிட்டின் பெற்றோர் சென்னை ஐகோர்ட்டில் அப்பீல் செய்தனர். சென்னை ஐகோர்ட் அதனை விசாரித்து டேவிட்டுக்கு எதிரான குற்றம் நிரூபிக்கப்படவில்லை என்று கூறி 2001-ம் ஆண்டு அக்டோபரில் அவரை விடுதலை செய்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து 2002-ம் ஆண்டு தமிழக அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் மனுச் செய்யப்பட்டது. 

இந்த மனுவை விசாரித்த சுப்ரீம்கோர்ட் நீதிபதிகள் பண்டாரி, சர்மா ஆகியோர்  நேற்று தீர்ப்பளித்தனர். அதில் ஜான்டேவிட்டை விடுதலை செய்து சென்னை ஐகோர்ட் அளித்த தீர்ப்பை ரத்து செய்து, கடலூர் செசன்ஸ் கோர்ட் அளித்த தீர்ப்பான இரட்டை ஆயுள் தண்டனையை உறுதி செய்வதாக உத்திரவிட்டனர். குற்றம் சாட்டப்பட்ட ஜான்டேவிட்டுக்கு எதிராக சூல்நிலை ஆதாரங்கள் உள்ளன. இருந்தபோதிலும் அவற்றைக் கருத்தில் கண்டுகொள்ளாது ஐகோர்ட் தீர்ப்பளித்திருப்பது அதிருப்தி அளிப்பதாக உள்ளது என்றும் நீதிபதிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும்  ஜான்டேவிட்டை உடனடியாக கடலூர் மத்திய சிறை கண்காணிப்பாளர் முன்பு ஆஜர் படுத்த வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்