முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

லைபீரியா விமான விபத்தில் ராணுவ தளபதி - 11 பேர் பலி

செவ்வாய்க்கிழமை, 12 பெப்ரவரி 2013      உலகம்
Image Unavailable

 

மான்ரோவியா, பிப்.13 - லைபீரியாவில் நடந்த விமான விபத்தில் கினியா தளபதி உள்பட 11பேர் உயிரிழந்தனர். ஆப்பிரிக்க நாடான லைபீரியாவில் ராணுவ தினம் கொண்டாடப்பட்டது. இதில் பங்கேற்ற கினியா உள்ளிட்ட அண்டை நாட்டு ராணுவ அதிகாரிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

இதையடுத்து கினியா நாட்டு ரணுவ தலைமை தளபதி ஜெனரல் சாலிமேன் கெலிபா டயல்லோ தலைமையில் 6 பேர் குழு ஒரு விமானத்தில் புறப்பட்டுச் சென்றது. இவர்களுடன் விமான ஊழியர்கள் 5 பேரும் விமானத்தில் இருந்தனர்.

      லைபீரியாவில் உள்ள சார்லஸ் வில்லே என்ற இடத்தில் 

சென்றபோது, விமானம் விபத்துக்குள்ளாகி கீழே விழுந்து நொறுங்கியது. இதில் ராணுவ தளபதி டயல்லோ உள்பட 11 பேரும் இறந்தனர். தகவல் அறிந்ததும் மீட்புக் குழுவினர் அங்கு செந்று அவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

இத்தகவலை கினியா ராணுவ மந்திரி அப்துல் கபேலே கமாரா

தெரிவித்தார். இதுதொடர்பாக அந்த நாட் டில் 3 நாள்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்