முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐ.பி.எல். போட்டி - கொச்சி கொல்கத்தாவை வீழ்த்தியது

வியாழக்கிழமை, 21 ஏப்ரல் 2011      விளையாட்டு
Image Unavailable

 

கொல்கத்தா, ஏப். 22 - இந்தியன் பிரீமியர் லீக் 20 -க்கு 20 கிரிக்கெட் போட்டியில் கொல்கத் தாவில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில், கொச்சி டஸ்கர்ஸ் கேரளா அணி பரபரப்பான ஆட்டத்தில் 6 ரன் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தி முன்னிலை பெற்றுள்ளது. குறைந்த ஸ்கோரைக் கொண்ட இந்தப் போட்டியில் கொச்சி அணி தரப்பில், ஆல்ரவுண்டர் ஜடேஜா, ஜெயவர்த்தனே மற்றும் பிரண்டன் மெக்குல்லம் ஆகியோர் நன்கு பேட்டிங் செய்து அணிக்கு முன்னிலை பெற்றுத் தந்தனர். 

பின்பு பெளலிங்கின் போது, ஆர்.பி. சிங் மற்றும் ஜடேஜா இருவரும் அபாரமாக பந்து வீசி முக்கிய விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். தவி ர, முரளீதரன், பொவார் மற்றும் வினய்குமார் ஆகியோர் அவர்களுக் கு பக்கபலமாக பந்து வீசினர். 

ஐ.பி.எல். டி - 20 போட்டியில் கொல்கக்தாவில் உள்ள புகழ் பெற்ற ஈடன் கார்டன் மைதானத்தில் 22 - வது லீக் ஆட்டம் நடந்தது. இதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், கொச்சி டஸ்கர்ஸ் கேரளா அணியும் மோதின. 

முன்னதாக இதில் டாசில் வெற்றி பெற்ற கொல்கத்தா அணி பீல்டிங் கை தேர்வு செய்தது. கொச்சி அணி தரப்பில், பிரண்டன் மெக்குல்லம் மற்றும் கேப்டன் ஜெயவர்த்தனே இருவரும் ஆட்டத்தை துவக்கினர். 

முதலில் பேட்டிங் செய்த கொச்சி அணி இறுதியில், நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 132 ரன்னை எடுத்தது. கொச்சி அணி தரப்பில், 2 வீரர்கள் கால் சதம் அடித்தனர். மற்ற வீரர்கள் குறைந்த ரன் னில் ஆட்டம் இழந்தனர். 

ஆல்ரவுண்டர் ஜடேஜா இந்தப் போட்டியில் பேட்டிங் மற்றும் பெள லிங் இரண்டிலும் ஜொலித்தார். அவர் அதிகபட்சமாக, 18 பந்தில் 29 ரன்னை எடுத்தார். இதில் 1 பவுண்டரி மற்றும் 3 சிக்சர் அடக்கம். இறு தியில் அவர், லீ வீசிய பந்தில் பதானிடம் கேட்ச் கொடுத்து வெளியே றினார். 

அடுத்தபடியாக, கேப்டன் ஜெயவர்த்தனே 27 பந்தில் 25 ரன்னை எடுத் தார். இதில் 5 பவுண்டரி அடக்கம். துவக்க வீரர் மெக்குல்லம் 19 பந்தி ல் 23 ரன்னை எடுத்தார். தவிர, ஜாதவ் 12 ரன்னையும், கோம்ஸ் 10 ரன் னையும், வினய் குமார் 11 ரன்னையும் எடுத்தனர். 

கொல்கத்தா அணி சார்பில், சுழற் பந்து வீரர்கள் நன்கு பந்து வீசினர். யூசுப் பதான் 20 ரன்னைக் கொடுத்து 3 விக்கெட் எடுத்தார். ஷாகிப் அல் ஹசன் 28 ரன்னைக் கொடுத்து 3 விக்கெட் எடுத்தார். தவிர, பிரட் லீ 1 விக்கெட் எடுத்தார். 

கொல்கத்தா அணி 133 ரன்னை எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற எளிய இலக்கை கொச்சி அணி வைத்தது. அடுத்து களம் இறங்கிய அந் த அணி 20 ஓவரில் 9 விக்கெட்டை இழந்து 126 ரன்னை எடுத்தது. 

இதனால் கொச்சி அணி இந்த லீக் ஆட்டத்தில் 6 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் அந்த அணி 2 வெற்றிப் புள்ளி களைப் பெற்று பட்டியலில் முன்னேறி வருகிறது. 

கொல்கத்தா அணி தரப்பில், எம்.கே. திவாரி அதிகபட்சமாக, 51 பந்தி ல் 48 ரன்னை எடுத்தார். அவர் 2 ரன் வித்தியாசத்தில் சத வாய்ப்பை கோட்டை விட்டது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்தது. அவர் 2 பவுண்டரி மற்றும் 2 சிக்சரை விளாசினார். 

அடுத்தபடியாக, துவக்க வீரர் பிஸ்லா 14 பந்தில் 16 ரன்னை எடுத்தார். தவிர, இக்பால் அப்துல்லா 12 ரன்னையும், மார்கன் மற்றும் பாட்டி யா இருவரும் தலா 10 ரன்னையும், எடுத்தனர். கேப்டன் காம்பீர் 3 ரன்னிலும், காலிஸ் 6 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர். 

கொச்சசி அணி சார்பில், ஆர். பி.சிங் 25 ரன்னைக் கொடுத்து 2 விக்கெ ட் எடுத்தார். ஜடோஜா 25 ரன்னைக் கொடுத்து 2 விக்கெட் எடுத்தார். தவிர, முரளீதரன், பொவார் மற்றும் வினய் குமார் ஆகியோர் தலா 1 விக்கெட் எடுத்தனர். இந்தப் போட்டியின் ஆட்டநாயகனாக ஜெயவர் த்தனே தேர்வு செய்யப்பட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்