முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொச்சி அணிக்கு எதிராக தோல்வி ஏன்? காம்பீர் பேட்டி

வியாழக்கிழமை, 21 ஏப்ரல் 2011      விளையாட்டு
Image Unavailable

 

கொல்கத்தா, ஏப். 22 - இந்தியன் பிரீமியர் லீக் டி - 20 போட்டியில் கொச்சி அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் கொல்கத்தா அணி வீரர்கள் முழுத் திறனுடன் ஆடாத தே தோல்விக்கு காரணம் என்று அந்த அணியின் கேப்டனான கெளத ம் காம்பீர் விளக்கம் அளித்திருக்கிறார். இது பற்றிய விபரம் வருமாறு - 

இந்தியன் பிரீமியர் லீக் போட்டியில் நேற்று முன் தினம் 2 ஆட்டம் நடந்தது. கொல்கத்தாவில் நடந்த 2 -வது ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், கொச்சி கேரளா டஸ்கர்ஸ் கேரளா அணியும் மோதின. 

மிகவும் விறுவிறுப்பாக நடந்த இந்த ஆட்டத்தில் கொச்சி டஸ்கர்ஸ் கேரளா அணி 6 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. குறை ந்த ஸ்கோரைக் கொண்ட இந்தப் போட்டியில் கொல்கத்தா அணி வெ ற்றியை நழுவ விட்டது. 

முன்னதாக, இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கொச்சி டஸ்கர்ஸ் கேரளா அணி 20 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 132 ரன்னை எடுத்தது. இதில் இரண்டு வீரர்கள் கால் சதம் அடித்தனர். 

133 ரன்னை எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற இலக்குடன் அடுத்த தாக கொல்கத்தா அணி இறங்கியது. ஆனால் அந்த அணி 20 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 126 ரன்னை எடுத்தது. 

போட்டி முடிந்த பிறகு நடந்த பத்திரிகையாளர்கள் கூட்டத்தின் போ து, கேப்டன் காம்பீர் இந்தப் போட்டியில் தோல்வி அடைந்ததற்கான காரணத்தை விளக்கினார், அவர் அளித்த பதில் வருமாறு - 

சுமாரான ஸ்கோரைக் கொண்ட இந்தப் போட்டியில் எங்களது அணியின் தோல்விக்கு பேட்ஸ்மேன்களின் மோசமான ஆட்டமே காரண மாகும். அவர்கள் இன்னும் சற்று முயற்சி செய்து இருந்தால் வெற்றி பெற்று இருக்கலாம். 

நாங்கள் இந்தப் போட்டியில் எளிதான வெற்றியைப் பெற்று இருக்க முடியும். கடந்த போட்டியை விட ஆடுகளம் நன்றாகவே இருந்தது. இந்தப் போட்டியில் எங்களது வீரர்களின் மோசமான ஆட்டத்தால் தோல்வி அடைந்தது ஏமாற்றம் அளிக்கிறது. 

இந்தப் போட்டியில் கொச்சி அணி வீரர்களின பந்து வீச்சு சிறப்பாக இருந்தது. இதுவே அவர்களது வெற்றிக்கு முக்கிய காரணமாகும். அவ ர்களுக்கு எனது பாராட்டுகள். இவ்வாறு அவர் கூறினார். 

கொச்சிஅணிக்கு எதிரான இந்தப் போட்டியின் போது, எல்லைக் கோட்டருகே ஒரு கேட்சை பிடிக்க முயன்ற போது, யூசுப் பதானிற்கு முழங்காலில் காயம் ஏற்பட்டது. 

எனவே அடுத்த போட்டியில் அவர் ஆடுவாரா என்று கேப்டன் காம்பீ ரிடம் கேட்ட போது, பதான் நன்றாக இருக்கிறார். காயத்திற்காக தற் போது சிகிட்சை எடுத்து வருகிறார். அடுத்த போட்டியில் ஆடுவார் என்று பதில் அளித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்