முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மதுரை மீனாட்சி அம்மனுக்கு வைர நெக்லஸ் காணிக்கை

ஞாயிற்றுக்கிழமை, 24 ஏப்ரல் 2011      ஆன்மிகம்
Image Unavailable

மதுரை,ஏப்.24 - உலகப் பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மனுக்கு ரூ. 10 லட்சம் மதிப்பில் வைர நெக்லசை பக்தர் ஒருவர் காணிக்கையாக வழங்கி உள்ளார். மதுரை மீனாட்சி அம்மனுக்கு ரூ. 10 லட்சத்து 5 ஆயிரம் மதிப்புள்ள வைரக்கற்கள் பதிக்கப்பட்ட நெக்லசை பக்தர் ஒருவர் காணிக்கையாக வழங்கினார். இதை கோயில் நிர்வாக அதிகாரி பத்மநாபன் பெற்றுக் கொண்டு காணிக்கைக்கு ரசீது வழங்கினார். வைர நெக்லஸ் காணிக்கையாக வழங்கிய பக்தரிடம் அவரது பெயர், விவரங்கள் பற்றி கேட்ட போது மீனாட்சி அம்மன் மேல் உள்ள பக்தியினால் நான் இந்த வைர நெக்லசை காணிக்கையாக அளிக்கிறேன். என் பெயர் விவரம் கூற விரும்பவில்லை என்று கூறினார். இது குறித்து கோயில் அதிகாரி பத்மநாபன் கூறுகையில், பக்தர் காணிக்கையாக வழங்கிய வைர நெக்லஸ் விழாக் காலங்களில் மீனாட்சி அம்மனுக்கு அணிவிக்கப்படும் என்று கூறினார். மதுரை மீனாட்சி அம்மனுக்கு விலை உயர்ந்த பொருட்களை காணிக்கையாக அளிக்கும் பக்தர்கள் தங்கள் பெயர், விலாசம் முதலியவற்றை தெரிவித்து அளிக்க வேண்டும் என்று புது விதி ஒன்று போடப்பட்டிருந்தது. ஆனால் தற்போது பத்து லட்சம் மதிப்புள்ள வைர நெக்லஸ் அளித்த பக்தர் தனது பெயர் விவரங்களை தெரிவிக்க மறுத்த நிலையில் மீனாட்சி அம்மன் கோயில் நிர்வாக அதிகாரி பெற்றுக் கொண்டது குறிப்பிடத்தக்கதாகும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்