முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஏகாம்பரநாதர் கோலில் பட்டுபோன மாமரம் பூத்து குலுங்கியது-ஜெயலலிதா முயற்சி வெற்றி

திங்கட்கிழமை, 25 ஏப்ரல் 2011      தமிழகம்
Image Unavailable

சென்னை, ஏப்.- 25 - காஞ்சிபுரம் மாவட்டம் ஏகாம்பரநாதர் கோவிலில் 3,500 ஆண்டுகளுக்கு முந்தைய மாமரத்தில் தற்போது மீண்டும் மாங்காய்கள் காய்க்கத் தொடங்கியுள்ளன. இதை பக்தர்கள் ஆர்வத்துடன் பார்த்துச் செல்கின்றனர். இந்த மாமரம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பட்டுப்போனது. அப்போது தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதாவின் உத்தரவுப்படி வேளாண்மைத்துறை உயர் அதிகாரிகள் கொண்டு குழுவினர், இக்கோவிலில் முகாமிட்டுப் பட்டுப்போன மாமரத்திற்கு உயிர்கொடுக்க தீவிர முயற்சி செய்தனர்.
கடந்த 2002-ம் ஆண்டு டிசம்பர் 9-ம் தேதி இதற்கான முயற்சிகள் தொடங்கின. அந்த முயற்சி வெற்றியடைந்து, அதே மரத்தினுடைய உயிரணுக்கள் மூலம் மாமரம் தற்போது பச்சைப் பசேல் என மீண்டும் வளர்ந்து புத்துயிர் பெற்று காட்சியளிக்கிறது. காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில், பஸ் நிலையத்திலிருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இத்திருக்கோவில் அமைந்துள்ள இடத்துக்கு சிவாஞ்சி என்ற சிறப்பு பெயரும் உண்டு. இத்தலத்தில் எழுந்தருளி அருள்பாலிக்கும் இறைவன் திருநாமம், ஏகாம்பரநாதர், இறையின் திருநாமம் ஏலவார்குழலி.
ஏகம் என்றால் ஒன்றாவனவன். தன்னிகரற்ஹ தலைவன். ஆரம்பரம் என்றால் மாமரம். ஒற்றை மாவின் மூலத்திலிருந்து தோன்றியவன் என்பதால் இப்பெயர் வழங்கலாயிற்று. இக்கோயிலின் உள் பிரகாரத்தில் உள்ள மாமரம் 3,500 ஆண்டுகளுக்கு மேலானதாகும். இந்த மரத்தின் 4 கிளைகளிலும் 4 விதமான ருசியும் (இனிப்பு, புளிப்பு, கசப்பு, துவர்ப்பு), 4 வடிவங்களில் மாங்கனிகள் கிடைத்து வந்தன.
அப்பர், சுந்தர், சம்பந்தர், மாணிக்கவாசகர் ஆகிய நால்வரால் பாடல் பெற்ற புகழும் சிறப்பும் பெற்ற ஸ்தலமாகும். காலமேக புலவர், இரட்டை புலவர், பட்டினத்தார் போன்றவர்களுக்கும் இத்தலப் பெருமானை வெகுசிறப்பாக புகழ்ந்து பாடியுள்ளனர். பஞ்சபூத ஸ்தலங்களில் ஒன்றான மண் ஸ்தலம் ஏகாம்பரநாதர் கோவிலில் தான் அமையப் பெற்றுள்ளது.
இந்த மரத்தின் அடியில்தான் காமாட்சியம்மன் தவம் செய்து, மண்ணால் சிவலிங்கத்தை செய்து, அவரையே திருமணம் செய்தார் என்பது ஐதீகம். இதனால் இந்த புண்ணிய மாமரம் அருகே பல ஆண்டுகளாக பொதுமக்கள் தங்களது வீட்டு திருமணங்களை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இந்த மாமரத்தில் பூக்கள் பூக்கத் தொடங்கின. தற்போது மாங்காய்கல் காய்க்கத் தொடங்கியுள்ளன. ஒரு சில காய்கள் கனியத் தொடங்கியுள்ளது.
இந்தியா மட்டுமல்லாமல் வெளிநாடுகளிலிருந்தும் திரளான பக்தர்கள் இக்கோயிலுக்கு வந்திருந்து, ஏகாம்பரநாதரையும், ஏலவார் குழலியையும் தரிசித்து, அதிய மாமரத்தை கண்டு களித்து செல்கின்றனர்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago