முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஊட்டி ஸ்ரீ காசி விஸ்வநாதர் கோவில் கும்பாபிஷேம்:

திங்கட்கிழமை, 25 ஏப்ரல் 2011      ஆன்மிகம்
Image Unavailable

ஊட்டி, ஏப்.- 25  - ஊட்டி ஸ்ரீ காசி விஸ்வநாதர் திருக்கோயிலில் நடைபெற்ற மகா கும்பாபிஷேக விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். ஊட்டி காந்தல் பகுதியில் அமைந்துள்ள மிகவும் பிரசித்தி பெற்ற அருள்மிகு விசாலாட்சி அம்பாள் உடனமர் காசிவிஸ்வநாத சுவாமி, ஸ்ரீ பாலதண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் ஜூர்ணோத்தாரண அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழா நேற்று மிகச்சிறப்பாக நடைபெற்றது. பேரூர் ஆதினம் சாந்தலிங்க ராமசாமி அடிகளார், பேரூர் இளைய பட்டம்

மடாதிபதி மருதாசல அடிகளார் ஆகியோர் முன்னிலையில் நேற்று காலை 9.00 மணி முதல் நடைபெற்ற கும்பாபிஷேக விழாவில் முதலில் விநாயகர் கோவிலில் கும்பாபிஷேகமும், அதனைத்தொடர்ந்து கோவில் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள அனைத்து பரிவார மூர்த்திகளின் திருக்கோயில்களிலும் கும்பாபிஷேம் நடத்தப்பட்டு இறுதியில் ஸ்ரீ காசி விஸ்வநாதர் திருக்கோயிலின் கும்பத்திற்கு மஹாகும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. அப்போது அங்கு கூடியிருந்த பக்தர்கள் ஓம் நமச்சிவாய என்ற பக்தி கோஷங்களை எழுப்பினர்.  

இந்த கும்பாபிஷேக நிகழ்ச்சியில் கர்நாடகாவில் உள்ள ஆதி சுஞ்சன்கிரி மடத்தின் இளைய மடாதிபதி சோம்நாத் சுவாமிஜி, கம்பம் தொகுதி எம்.எல்.ஏ.,என்.ராமகிருஷ்ணன் மற்றும் ஊட்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியைச் சேர்ந்த பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு கும்பாபிஷேக நிகழ்ச்சியை கண்டு மகிழ்ந்தனர். கும்பாபிஷேக விழாவை காண வந்த பகதர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

கும்பாபிஷேக விழாவிவையொட்டி கடந்த கடந்த 20-ந் தேதி காலை 9.00 மணிக்கு கணபதி ஹோமத்துடன் பூஜைகள் தொடங்கியது அதனைத்தொடர்ந்து கடந்த 4 நாட்களாக பல்வேறு சிவாலயங்களிலிருந்து வந்திருந்த 72 சிவாச்சாரியர்களால் 6 கால யாக பூஜைகள் நடத்தப்பட்டது. நேற்று காலை கும்பாபிஷேகம் நடந்தது. மாலை 4.மணிக்கு மஹா அபிஷேகம் நடைபெற்றது. இன்று 25-ந் தேதி காலை 10.00 மணிக்கு திருக்கல்யாண உற்சவமும், மாலை 3.00 மணிக்கு சுவாமி திருவீதி உலா நிகழ்ச்சியும் நடக்கிறது. 

விழாவிற்கான ஏற்பாடுகளை அருள்மிகு காசி விஸ்வநாதர் வழிபாட்டு அறக்கட்டளை செயலாளர் டி.சி.பாலசுப்பிரமணியம், பொருளாளர் பி.கிருஷ்ணமூர்த்தி, உபதலைவர்கள் வக்கீல் ரங்கசாமி, கன்னியப்பன், டாக்டர் ராஜன், ராஜேந்திரன், ஆடிட்டர் ராமசுப்பிரமணியம், ரவிபிரகாஷ், துணை செயலாளர்கள் கோபாலகிருஷ்ணன், சோமசுந்தர், கிருஷ்ணன், துணை பொருளாளர்கள் ரவிசங்கர், சிவராஜ் மற்றும் விழாக்குழுவினர் சிறப்பாக செய்திருந்தனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்