முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆண் துணையின்றி முஸ்லிம் பெண்கள் தனியாக ஹஜ் செல்லதடை

வெள்ளிக்கிழமை, 29 மார்ச் 2013      உலகம்
Image Unavailable

கொச்சி: மார்ச் - 30 - முஸ்லிம் பெண்கள் ஆண் துணையின்றி தனியாக ஹஜ் பயணம் மேற்கொள்ள கேரள அரசு தடை விதித்துள்ளது. மலப்புரம் மாவட்டம் கடலங்குடியை சேர்ந்த அமினா குட்டி முகமது (64) என்ற பெண் ஹஜ் பயணம் செய்ய அனுமதி கேட்டு ஹஜ் கமிட்டியிடம் விண்ணப்பித்திருந்தார். அவர்மட்டும் தனியாக போவதற்காக விண்ணப்பித்திருந்தார். ஆனால், ஆண் துணையின்றி ஹஜ் பயணம் மேற்கொள்ள கூடாது என்று கூறி அவரது மனு நிராகரிக்கப்பட்டது. இதை எதிர்த்து கேரள உயர்நீதிமன்றத்தில் அமினா குட்டி தாக்கல் செய்த மனுவில், பெண் துணையுடன் ஹஜ் செல்ல அனுமதிக்க வேண்டும் என்று கூறியிருந்தார். இந்த மனுவை ஐகோர்ட் விசாரித்து அரசு பதில் மனு தாக்கல் செய்த உத்தரவிட்டது. இதுதொடர்பாக அரசு சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. கேரள அரசு மூத்த வக்கீல் சாஜித், கோர்ட்டில் ஆஜராகி கூறுகையில், ாபெண்களின் பாதுகாப்பு கருதி தனியாக பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும் என்று இந்திய ஹஜ் கமிட்டி உறுதியாக தெரிவித்துள்ளது. இந்த கமிட்டியின் விதிமுறைப்படி குடும்பத்தில் உள்ள ஆண் ஒருவருடன் சேர்ந்து பெண் பயணம் மேற்கொள்ளலாம். அந்த ஆண், அந்த பெண்ணுக்கு சகோதரர் அல்லது தந்தை உறவில் இருக்க வேண்டும்.இஸ்லாமிய சட்டப்படி அந்த ஆண் நபர் மெஹ்ரம் என்று அழைக்கப்படுகிறார்ா என்றார். இதை தொடர்ந்து வழக்கு விசாரணை தள்ளி வைக்கப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்