முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐ.பி.எல். போட்டி - சைமண்ட்ஸ் ஆட்டம் அபாரம் - சச்சின்

திங்கட்கிழமை, 25 ஏப்ரல் 2011      விளையாட்டு
Image Unavailable

 

ஐதராபாத், ஏப். 26 - ஐ.பி.எல். லீக் போட்டியில் ஐதராபாத் டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை அணி வெற்றி பெற்றதற்காக ஆஸி. வீரர் சைமண்ட்சை கேப்டன் டெண்டுல்கர் பாராட்டினார். இது பற்றிய விப ரம் வருமாறு -  

ஐதராபாத்தில் கடந்த 24 -ம் தேதி நடந்த லீக் ஆட்டத்தில் கேப்டன் டெண்டுல்கர் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் கேப்டன் சங்கக்கரா தலைமையிலான ஐதராபாத் டெக்கான் சார்ஜர்ஸ் அணியும் மோதின. 

இந்தப் போட்டியின் இறுதியில் மும்பை அணி 37 ரன்கள் வித்தியாசத் தில் அபார வெற்றி பெற்றது. வெற்றி குறித்து மும்பை அணி கேப்டன் டெண்டுல்கர் நிருபர்களிடம் தெரிவித்ததாவது - 

எங்கள் வீரர் டேவிட் ஜேக்கப் நல்ல தொடக்கத்தை ஏற்படுத்தி கொடு த்தார். ஆனாலும் 70 ரன்னில் அடுத்தடுத்து 3 விக்கெட்டுகள் விழுந்தது சற்று பின்னடைவாக இருந்தது. 

ஆனால் ரோகித் சர்மாவும், சைமண்ட்சும் இணைந்து நின்று அபார மாக ஆடி அணி ஸ்கோரை உயர்த்தி கொடுத்தனர். 3 விக்கெட்டுகள் அடுத்தடுத்து விழுந்த நிலையில், அவர்கள் இருவரும் இதை சவாலாக எடுத்து நிலைத்து நின்று ரன் குவித்து விட்டனர். 

அதிலும் சைமண்ட்ஸ் தான் ஒரு சாம்பியன் பேட்ஸ்மேன் என்பதை நிரூபித்து விட்டார். நாங்கள் 172 ரன்கள் எடுத்தது அதிகபட்ச ஸ்கோர் தான். ஆனாலும் இன்னும் 20 ல் இருந்து 25 ரன்கள் வரை எடுத்து இரு க்க வேண்டும் என நான் கருதுகிறேன். 

தவிர, இந்தப் போட்டியில் எங்களது பீல்டிங்கும் சிறப்பாக இருந்தது. 2 பேரை ரன் அவுட்டாக்கினோம். இதே திறமையை இனி வரும் போ   ட்டிகளிலும் வெளிப்படுத்துவோம். 

எங்கள் அணியில் மூத்த வீரர்கள், இளம் வீரர்கல் என அனைத்து தரப்பி   னரும் இடம் பெற்று இருக்கிறோம். நாங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து சிறப்பாக ஆடுவதால் தான் தொடர்ந்து வெற்றி பெறுகிறோம். 

ஆட்டத்தின் போது ஒவ்வொரு நிமிடத்தையும் கவனமாக கையாள்கி றோம். எங்களது வெற்றிக்கு இதுவும் ஒரு காரணமாகும். இவ்வாறு கேப்டன் டெண்டுல்கர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago