முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கனிமொழியை கைது செய்ய ஜெயலலிதா வலியுறுத்தல்

திங்கட்கிழமை, 25 ஏப்ரல் 2011      ஊழல்
Image Unavailable

 

சென்னை, ஏப்.26 - 2ஜி ஸ்பெக்ட்ரம் இமாலய ஊழலில் சி.பி.ஐ. குற்றபத்திரிகையில் இடம்பெற்றுள்ள, கருணாநிதியின் மகள் கனிமொழியை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா, கலைஞர் டி.வி. உரிமத்தை ரத்து செய்து அதன் ஒளிபரப்பை தடை செய்யவேண்டும் என்று கூறியுள்ளார்.

இது குறித்து ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

2ஜி ஸ்பெக்ட்ரம் இமாலய ஊழலில் மத்திய புலனாய்வுத் துறையால் தாக்கல் செய்யப்பட்டுள்ள இரண்டாவது குற்றச்சாட்டு பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.  இதன் மூலம் முன்னாள் மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் ஆண்டிமுத்து ராசாவால் ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீடு செய்யப்பட்ட முக்கிய பயனாளிகளுக்கும், மைனாரிட்டி தி.மு.க. அரசின் முதலமைச்சர் கருணாநிதி குடும்பத்தினருக்கும் இடையே உள்ள சட்ட விரோத பணப் பரிமாற்றம் தெளிவாக நிரூபிக்கப்பட்டுள்ளது. 2ஜி ஸ்பெக்ட்ரம் இமாலய ஊழலின் முக்கிய பயனாளி நிறுவனமான ஸ்வான் டெலிகாம் நிறுவனத்தை ஆரம்பித்த ஷாகித் பால்வா தொடர்புடைய திகைப்nullட்டும் பல நிறுவனங்கள் வழியாக கலைஞர் டி.வி.க்கு 214 கோடி ரூபாய் அளிக்கப்பட்டுள்ளதன் அடிப்படையில் இந்தத் தொடர்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.கலைஞர் டி.வி.யின் 60 விழுக்காடு பங்குகளை கருணாநிதியின் இரண்டாவது மனைவி தயாளு அம்மாள் வைத்திருக்கிறார்.  20 விழுக்காடு பங்குகள்  கருணாநிதியின் மூன்றாவது மனைவியின் மகள் கனிமொழிக்கு சொந்தமானது.  சில வாரங்களுக்கு முன்பு தயாளு அம்மாளையும், கனிமொழியையும் மத்திய புலனாய்வுத் துறை விசாரித்தது.  அப்பொழுதிலிருந்தே, மத்திய புலனாய்வுத் துறையின் குற்றப் பத்திரிகையில் தயாளு அம்மாள் மற்றும் கனிமொழியின் பெயர்கள் இடம் பெறும் என்ற கருத்து பரவலாக இருந்து வந்தது.  

இந்த வகையில், இன்று மத்திய புலனாய்வுத் துறையால் தாக்கல் செய்யப்பட்ட குற்றப் பத்திரிகையில் கனிமொழியின் பெயர் இருப்பதில் எவ்வித வியப்பும் இல்லை.  இருப்பினும், 20 விழுக்காடு பங்குகளை வைத்திருக்கும் கனிமொழி மற்றும் சரத் குமார் ஆகியோரின் பெயர்கள் குற்றப் பத்திரிகையில் இடம் பெற்றிருக்கும் சூழ்நிலையில், 60 விழுக்காடு பங்குகளை வைத்துள்ள தயாளு அம்மாளின் பெயர் விடுபட்டிருப்பது தான் இதில் உள்ள வியப்புக்குரிய அம்சம். 

இந்தச் சூழ்நிலையில், சில பிரச்சினைகளை மிகுந்த கவனத்துடன் பரிசீலனை செய்வது பொருத்தமாக இருக்கும். கலைஞர் டி.வி.யில் கனிமொழிக்கு வெறும் 20 விழுக்காடு பங்கு மட்டும் இருக்கையில், தயாளு அம்மாளுக்கு ஏன் 60 விழுக்காடு பங்கு? இதற்குக் காரணம், தனிப்பட்ட முறையில் அவர்கள் இந்த பங்குகளை வைத்திருக்கவில்லை.  கனிமொழி, தனக்கும், தனது தாயார் ராஜாத்திக்கும் சேர்த்து 20 விழுக்காடு பங்குகளை வைத்திருக்கிறார்.  உண்மை நிலை என்னவென்றால், இருவருக்கும் இதில் சம பங்கு உண்டு.

இதே போன்று, தயாளு அம்மாள் வைத்திருக்கும் 60 விழுக்காடு பங்கில் தயாளு அம்மாளை தவிர, அவரது கணவர் மு. கருணாநிதி, அவருடைய மகன்கள் மு.க. அழகிரி, மு.க. ஸ்டாலின், மு.க. தமிழரசு மற்றும் மகள் மு.க. செல்வி ஆகியோருக்கும் சம பங்குகள் உண்டு.  தனக்கு எந்தவித பயனும் இல்லாத, அண்மையில் ஆரம்பிக்கப்பட்ட கலைஞர் டி.வி.க்கு 214 கோடி ரூபாய் பணம் கொடுக்கப்பட்டதை ஷாகித் பால்வாவால் எவ்விதத்திலும் நியாயப்படுத்த முடியாது. 2ஜி ஸ்பெக்ட்ரம் உரிமத்தை ஒதுக்கீடு செய்ததற்கு பிரதிபலனாக, லஞ்சமாக, அப்போதைய தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் ராசா கேட்டுக் கொள்ளாமல், இந்த பணத்தை கலைஞர் டி.வி.க்கு ஷாகித் பால்வா அளித்திருக்க மாட்டார்.  

இதே போல், தன்னுடைய தலைவர் கருணாநிதி கேட்டுக் கொள்ளாமல், தனக்கு தொடர்பில்லாத கலைஞர் டி.வி. நிறுவனத்திற்கு லஞ்சமாக 214 கோடி ரூபாய் அளிக்கப்பட வேண்டும் என்று ராசாவும் வலியுறுத்தியிருக்க மாட்டார். சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால், 214 கோடி ரூபாய் ஷாகித் பால்வாவால் கருணாநிதிக்கு கொடுக்கப்பட்ட லஞ்சப் பணம்.  மத்திய புலனாய்வுத் துறை வழக்கு பதிவு செய்யவில்லை என்றால், இந்த 214 கோடி ரூபாய் லஞ்சப் பணம் கருணாநிதி குடும்ப உறுப்பினர்களை சென்றடைந்து இருக்கும். 

எனவே, நீதி நிலைநாட்டப்பட வேண்டுமென்றால், கருணாநிதி உட்பட, கருணாநிதி குடும்பத்தினர் அனைவரின் பெயர்களும் குற்றப் பத்திரிகையில் இடம் பெற வேண்டும்.   ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் ஸ்பெக்ட்ரம் இமாலய ஊழலில் கருணாநிதி குடும்பத்தினரின் தொடர்பு இத்துடன் நின்றுவிடவில்லை. வெறும் ஒரு லட்சம் ரூபாய் முதலீட்டில் ஆரம்பிக்கப்பட்டு நான்கு மாதங்கள் ஆகியிருந்த ஜெனிக்ஸ் எக்சிம் வென்சர்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்திற்கு ஷாகித் பால்வாவினுடைய ஸ்வான் டெலிகாம் நிறுவனம் 380 கோடி ரூபாய் மதிப்புள்ள பங்குகளை 17.12.2008 அன்று ஒதுக்கியது. 

துபாய் நாட்டைச் சேர்ந்த ஈடிஏ அஸ்கான் ஸ்டார் குரூப் என்ற நிறுவனத்தின் தலைவரும், இந்திய நாட்டில் வசிக்காத இந்திய வியாபாரியுமான சையத் முகம்மது சலாவுதீனின் இளைய மகன் அஹமத் சையத் சலாவுதீன் என்பவர் தான் ஜெனிக்ஸ் எக்சிம் சார்பில் ஸ்வான் டெலிகாம் குழுவில் அங்கம் வகிக்கிறார்.  இந்தக் குழுமம் தான், 1970​களில் கட்டப்பட்ட அண்ணா மேம்பாலம் முதல் தற்போது கட்டப்பட்டுக் கொண்டிருக்கின்ற 1,200 கோடி ரூபாய் மதிப்புடைய புதிய தலைமைச் செயலக கட்டிடம் வரை, தி.மு.க. அதிகாரத்தில் இருக்கும் போது கட்டப்படும் அனைத்து கட்டுமானப் பணிகளிலும் தொடர்பு கொண்டிருக்கிறது. 

தமிழக அரசின் 2,000 கோடி ரூபாய் உயிர் காக்கும் காப்பீட்டுத் திட்டத்தை இந்தக் குழுமம் தான் நடைமுறைப்படுத்திக் கொண்டு இருக்கிறது.  இந்தக் குழுமத்தைச் சேர்ந்த சில முக்கியமான நபர்களின் பெயர்கள் கருணாநிதியின் ஊழல் குறித்து விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பித்த சர்க்காரியா விசாரணை ஆணைய அறிக்கையில் இடம் பெற்றுள்ளன. கருப்புப் பணத்தை சலவை செய்வதில் தேர்ச்சி பெற்ற, கருணாநிதியுடன் nullண்ட காலமாக, நெருங்கிய தொடர்புடைய இந்த நிறுவனம் ஸ்பெக்ட்ரம் வழக்கில் சம்பந்தப்பட்டிருப்பதை தற்செயலாக ஏற்பட்டிருக்கும் நிகழ்வாக கருத முடியாது.  கலைஞர் டி.வி.க்கு சென்ற 214 கோடி ரூபாய்க்கும் மேல், பல கோடி ரூபாய் பணம் கருணாநிதி குடும்பத்திற்காக, ஹவாலா பணப் பரிமாற்றம் மூலம் வெளி நாடுகளில் பாதுகாப்பாக பதுக்கி வைக்கப்பட்டு இருக்கிறது என்ற கூற்றினை, வாதத்தினை இந்தத் தொடர்பு மேலும் வலுப்படுத்துகிறது. 

2ஜி ஸ்பெக்ட்ரம் குற்றப் பத்திரிகையில் கனிமொழியின் பெயர் இடம் பெற்றதுடன் இந்தப் பிரச்சினை நிச்சயம் நின்றுவிடாது.  லஞ்சப் பணத்தின் மூலம் ஆரம்பிக்கப்பட்ட கலைஞர் டி.வி.யின் உரிமம் ரத்து செய்யப்பட வேண்டும்; அதன் ஒளிபரப்பு உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.  கனிமொழி உட்பட குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட அனைவரும் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும்.  இந்த இமாலய ஊழலில் நேர்முகமாகவும், மறைமுகமாகவும் பயனடைந்த கருணாநிதி குடும்ப உறுப்பினர்கள் அனைவரின் பெயர்களும் குற்றப் பத்திரிகையில் இடம் பெற வேண்டும். அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட வேண்டும். இந்த லஞ்சப் பணம் சென்றடைந்த இடம் முழுமையாக கண்டறியப்பட வேண்டும்.  

இந்தியாவிற்கு வெளியே எடுத்துச் செல்லப்பட்ட பணம் அனைத்தும் திரும்பப் பெறப்பட வேண்டும்.  அப்பொழுது தான் அனைத்து ஊழல்களின் தாயாக விளங்கும் ஸ்பெக்ட்ரம் இமாலய ஊழலின் விசாரணை நியாயமான முடிவினை சென்றடையும்.  விஞ்ஞான ரீதியில் ஊழல் புரிவதில் வல்லவரான ஒருவர் தான் இந்த மாபெரும் ஊழலை நிகழ்த்தி இருக்கிறார் என்பதை மத்திய புலனாய்வுத் துறை கவனத்தில் வைத்துக் கொள்ள வேண்டும். 

இவ்வாறு ஜெயலலிதா தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago