முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருப்பரங்குன்றம் தொகுதியில் 29 பேர் மீது குற்றப்பத்திரிக்கை!

திங்கட்கிழமை, 25 ஏப்ரல் 2011      தமிழகம்
Image Unavailable

 

திருப்பரங்குன்றம்,ஏப்.26 - திருப்பரங்குன்றம் தொகுதியில் தேர்தல் விதிமீறியதாக மாணிக்தாகூர் எம்.பி. உள்ளிட்ட 29 பேர் மீது வழக்கு தொடர்பாக போலீசார் குற்றப்பத்திரிக்கை தயாரிக்கும் பணியில் மும்முரமாக உள்ளனர். 

கடந்த 13 ம் தேதி தமிழக சட்டசபை தேர்தலில் தேர்தல் ஆணையம் தமிழகத்தில் அனைத்து மக்களும் பாராட்டும் வகையில் கடுமையான தேர்தல் நடத்தை விதிமுறைகளை கொண்டு வந்தது. இத்தகைய தேர்தல் விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டதால் தமிழகத்தில் அமைதியாகவும், விறுவிறுப்பாகவும் தேர்தல் நடைபெற்றதுடன் அல்லாமல் கூடுதல் சதவீத வாக்குகளும் பதிவாயின. இந்த நிலையிலும் தேர்தல் விதி மீறியதாக போலீசார் பல்வேறு வழக்குகளை பதிவு செய்துள்ளனர். 

அந்த வழக்குகளை கடந்த கால தேர்தல் தொடர்பான வழக்குகள் போல கிடப்பில் போடாமல் உரிய நடவடிக்கை மேற்கொள்வதற்காக வரும் 30 ம் தேதிக்குள் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. ஆகவே தேர்தல் விதிகள் மீறிய வழக்கு தொடர்பாக குற்றப்பத்திரிக்கை தயார் செய்வதில் போலீசார் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். 

திருப்பரங்குன்றம் சட்டசபை தொகுதியை பொறுத்தவரை திருப்பரங்குன்றம் போலீஸ் உள்கோட்டத்தில் தேர்தல் விதி மீறியதால் 18 வழக்குகள் பதியப்பட்டுள்ளது. இதில் திருநகரில் 10 திருப்பரங்குன்றத்தில் 2, பெருங்குடியில் 2, அவனியாபுரத்தில் 4 என 18 வழக்குகள் போடப்பட்டுள்ளன. இதில் விருதுநகர் எம்.பி. மாணிக்தாகூர், மதுரை துணை மேயர் மன்னன் உள்ளிட்டோர் மீது குற்றப்பத்திரிக்கை தயார் செய்யும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்