முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குஜராத் முதல்வர் மோடி மீது மேலும் புகார்

திங்கட்கிழமை, 25 ஏப்ரல் 2011      அரசியல்
Image Unavailable

கட்ச்,ஏப்.26 - குஜராத் மாநிலத்தில் இனக்கலவரத்தை ஒடுக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்று முதல்வர் நரேந்திர மோடி அலுவலகத்தில் இருந்து தொலைபேசி மூலம் உத்தரவு வந்ததாக உயர் அதிகாரி ஒருவர் குற்றச்சாட்டு சுமத்தியுள்ளார். கடந்த 2002-ம் ஆண்டு கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் நடந்தது. இதில் 50-க்கும் மேற்பட்ட கரசேவகர்கள் கருகி செத்தனர். இதனையொட்டி குஜராத் மாநிலத்தில் இனக்கலவரம் வெடித்தது. இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பலியானார்கள் மற்றும் ஏராளமானோர் படுகாயம் அடைந்தனர். இந்த இனக்கலவரத்தை ஒடுக்க அப்போதும் முதல்வராக இருந்த முதல்வர் நரேந்திர மோடி நடவடிக்கை எதுவும் கடுமையாக எடுக்க வேண்டாம் என்று உத்தரவிட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கடந்த பல நாட்களுக்கு முன்பு ஐ.பி.எஸ். அதிகாரி சஞ்சீவ் பாத் என்பவர் சுப்ரீம்கோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் குஜராத் கலவரத்தை ஒடுக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்று முதல்வர் நரேந்திர மோடி வாய் மூலம் உத்தரவிட்டதாக கூறியுள்ளார். இந்த மனுவை தாக்கல் செய்த பல நாட்களுக்குள் மேலும் ஒரு ஐ.ஏ.எஸ். உயர் அதிகாரி, நரேந்திர மோடி மீது குற்றச்சாட்டு சுமத்தியுள்ளார். அதாவது கலவரத்தை ஒடுக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்று முதல்வர் அலுவலகத்தில் இருந்து தொலைபேசி மூலம் உத்தரவு வந்ததாக கூறியுள்ளார். ஐ.ஏ.எஸ். அதிகாரியான பிரதீப் சர்மா என்பவர் தற்போது சஸ்பெண்டில் உள்ளார். அவர் தற்போது சிறையில் இருக்கிறார். முதல்வர் அலுவலகத்தில் இருந்து ஒரு தொலைபேசி வந்ததாகவும் அதில் கலவரத்தை ஒடுக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்று எனது தம்பியும் ஐ.பி.எஸ். போலீஸ் அதிகாரியுமான குல்தீப் சர்மாவிடம் கூறுமாறு தம்மிடம் கேட்டுக்கொண்டதாக பிரதீப் சர்மா கூறியுள்ளார். 

குஜராத்தில் கலவரம் நடந்தபோது ஜாம்நகர் கமிஷனராக பிரதீப் இருந்தார். கடிதம் மூலம் சிறப்பு புலனாய்வு அமைப்பு தலைவர் ராகவனுக்கு பிரதீப் தெரிவித்துள்ளார். இந்த புகார் குறித்து விசாரணைக்கும் தயார் என்றும் பிரதீப் அந்த கடிதத்தில் மேலும் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago