முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராகுலுக்கு விரைவில் முக்கிய பொறுப்பு

திங்கட்கிழமை, 25 ஏப்ரல் 2011      இந்தியா
Image Unavailable

 

புது டெல்லி,ஏப்.26 - ராகுல் காந்தி தேசிய அரசியலில் விரைவில் முக்கிய பொறுப்பேற்பார் என காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் திக்விஜயசிங் தெரிவித்தார். 

செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டியளித்த அவர் மேலும் கூறுகையில், காங்கிரஸ் கட்சியில் இளைஞர்களுக்கு அதிக பொறுப்புகள் அளிக்கப்படும் என்று ராகுல் கூறியிருந்தார். இளைஞர்களுக்கு பொறுப்புகளை வழங்குவதில் தாமதம் இருக்கலாம். ஆனால் அது நிச்சயம் நடைமுறைப்படுத்தப்படும். அப்போது ராகுல் காந்தி முக்கிய பொறுப்பேற்பார். 

ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் முதல் பதவிக் காலத்தின் போது இருந்ததை விட இப்போது பிரதமரின் நன்மதிப்பு குறைந்து விட்டதா என்று கேட்டதற்கு முந்தைய ஆட்சிக் காலத்தை விட இப்போது பிரதமர் தைரியமாகவும், முழு வீச்சிலும் பணியாற்றி வருகிறார் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்