முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இலங்கை தமிழர் பிரச்சனை - மதுரை ஆதீனம் வலியுறுத்தல்

திங்கட்கிழமை, 25 ஏப்ரல் 2011      தமிழகம்
Image Unavailable

 

மதுரை,ஏப்.26 - இலங்கைத்தமிழர்களுக்கு இழைக்கப்பட்டுள்ள கொடுமைகளை தனி ஆணையம் அமைத்து விசாரிக்கவேண்டும் என மதுரை ஆதீனம் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து மதுரை ஆதீனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது, இலங்கைத்தமிழர்களுக்கு இழைக்கப்பெற்றுக்கொண்டிருக்கின்ற கொடுமைகளை தமிழ் இனப்படுகொலைகளை பரிசீலித்த ஐ.நா. அமைப்பு, அதிபர் ராஜபக்ஷே ஒரு போர்க்குற்றவாளி என்று தெளிவாக அறிவித்திருக்கின்றது.அக்குழு, அறிவித்தவா று,இலங்கைப்போரில் எவ்வளவு பெரிய கொடூரங்கள் நிகழ்ந்தன என்பதை ஆணையம் அமைத்து, விசாரணை நடத்தவேண்டும், தமிழர்களைக்கொன்று குவித்த ராஜபக்சேவை, சர்வதேசக்குற்றவாளிக்கூண்டில் ஏற்றித்தண்டனை வழங்கவேண்டும். முள்வேலியில் மிக  மோசமாக, மிருகங்கள், கால்நடைகளை அடைத்து வைத்திருப்பதைப்போல, இருபதாயிரம் மக்கள் மாத்திரமே தங்க வசதியுள்ள இடத்தில் அதற்கும் மேலான அளவில் அடைத்து வைத்து இலங்கைத்தமிழர்களுக்கு இழைக்கப்பெற்றுக்கொண்டிருக்கின்ற கொடுமைகளை, தமிழ்இனப்படுகொலைகளை பரிசீலித்த ஐ.நா.அமைப்பு, அதிபர் ராஜபக்சேவை ஒரு போர்க்குற்றவாளி என்று தெளிவாக அறிவித்திருக்கின்றனது. அக்குழு அறிவித்தவாறு, இலங்கைப்போரில் எவ்வளவு பெரிய கொடூரங்கள் நிகழ்ந்தன என்பதை ஆணையம் அமைத்து, விசாரணை நடத்தவேண்டும். இவ்வாறு அதில் கூறிப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்