முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கல்வி கட்டணத்தை உயர்த்த கோரிக்கை

திங்கட்கிழமை, 25 ஏப்ரல் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஏப்.26 - தனியார் மெட்ரிகுலேஷன் மற்றும் ஆங்கிலோ இந்தியன் பள்ளிகளில் நிர்ணயிக்கப்பட்டுள்ள கல்வி கட்டணத்தை இன்னும் கணிசமாக உயர்த்த வேண்டும் என்று nullநீதிபதி ரவிராஜபாண்டியன் குழுவிடம் மெட்ரிக் பள்ளி நிர்வாகிகள் கோரிக்கை மனு அளித்தனர்.

தமிழகத்தில் தனியார் நடத்தும் மெட்ரிகுலேஷன் மற்றும் ஆங்கிலோ இந்தியன் பள்ளிகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக பொது மக்கள் புகார் கூறியதை தொடர்ந்து தமிழக அரசு nullநீதிபதி கோவிந்தராஜன் தலைமையில் கல்வி கட்டணத்தை நிர்ணயிக்க குழு அமைத்திருந்தது.  இக்குழுவினர் ஒவ்வொரு பள்ளிகளிலும் ஆய்வு நடத்தி கட்டணங்களை நிர்ணயம் செய்து அறிவிப்பு வெளியிட்டனர். ஆனால் இந்த கல்விக்கட்டணம் மிகவும் குறைவாக இருப்பதாகக்கூறி தனியார் பள்ளிகள் அதை ஏற்க மறுத்தன. இதையடுத்து சுமார் 6,400 பள்ளி நிர்வாகிகள் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.  இதையொட்டி ஐகோர்ட்டு மீண்டும் பள்ளிகளை ஆய்வு செய்து கட்டணத்தை சரி செய்யுமாறு உத்தரவிட்டது. இந்நிலையில் nullநீதிபதி கோவிந்தராஜன் இந்த குழுவிலிருந்து திடீரென விலகினார். உடல் நலம் காரணமமாகவும், சொந்த பிரச்சனையின் காரணமாகவும் அவர் இக்குழுவிலிருந்து விலகுவதாக கூறினார்.

இதனைத்தொடர்ந்து ஓய்வு பெற்ற nullநீதிபதி ரவிராஜ் பாண்டியன் கல்வி கட்டண நிர்ணய குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டார். அவரது தலைமையிலான குழுவினர் தமிழ்நாடு முழுவதும் உள்ள தனியார் பள்ளிகளில் கட்டணம் நிர்ணயம் குறித்து கருத்து கேட்டனர். ஏற்கனவே மற்ற மாவட்ட பள்ளிகளில் கருத்து கேட்பு முடிந்து விட்டது. பல மாதங்களாக நடைபெற்று வரும் கருத்து கேட்பு கூட்டம், இப்போது  சென்னையில் உள்ள பள்ளி நிர்வாகிகளிடம் கல்வி கட்டணம் சரிதானா? அல்லது கூடுதலாக கல்வி கட்டணத்தை நிர்ணயிக்கலாமா? என்பதை பற்றி கருத்து கேட்பு நடைபெற்று வருகிறது. இதையொட்டி நேற்று காலை கல்லூரி சாலையில் உள்ள டி.பி.ஐ. வளாகத்தில் nullநீதிபதி ரவிராஜபாண்டியன் பள்ளி நிர்வாகிகளிடம் கருத்து கேட்டார். அவருடன் மெட்ரிகுலேசன் இயக்குனர் தேவராஜூம் உடன் இருந்தார்.  ஒவ்வொரு பள்ளி நிர்வாகிகளிடமும் சுமார் 5 நிமிட நேரம் விசாரிக்கப்பட்டது. ஏற்கனவே எவ்வளவு கட்டணம் வசூலிக்கப்பட்டது. தற்போது அரசு நிர்ணயித்த கட்டணம் எவ்வளவு? நீnullங்கள் எவ்வளவு வசூலிக்கலாம் என்று எதிர்பார்க்கிறீர்கள்? என்ற கேள்விகளுக்கு எழுத்து nullர்வமாக ஒவ்வொரு பள்ளி நிர்வாகிகளும் எழுதி கொடுத்தனர்.  பள்ளிக்கூடத்திற்கு கட்டப்படும் வரி, மின்சார செலவு, தொலைபேசி, கம்ப்யூட்டர் செலவு, பள்ளி வாடகை, பேப்பர் வாங்கும் செலவு, கட்டிட பராமரிப்பு செலவு, ஆசிரியர்களின் சம்பளம் போன்றவைக்கு எவ்வளவு செலவழிக்கப்படுகிறது என்பதை எழுத்துப்nullர்வமாக ஒவ்வொரு பள்ளி நிர்வாகிகளிடமும் எழுதி வாங்கி கொண்டனர். சென்னையில் மொத்தம் 600 பள்ளிகளில் இருந்து இதுபோன்ற விவரங்கள் பெறப்படுகின்றன. இதற்காக nullநீதிபதி ரவிராஜபாண்டியன் வருகிற 27-ந் தேதி வரை(நாளை வரை) மனுக்கள் வாங்குகிறார். இதன் பிறகு வருகிற மே மாதம் 2-ந் தேதி ஆங்கிலோ இந்தியன் பள்ளி நிர்வாகிகளிடமும் மனுக்கள் பெற உள்ளார். அனேகமாக 10​ந் தேதிக்குள் கல்வி கட்டண நிர்ணயம் குறித்து ஒரு தெளிவான விவரங்கள் தெரிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கருத்து கேட்பு குழுவில் ஆஜராகி மனு கொடுத்துவிட்டு வந்த பள்ளி நிர்வாகிகள் சிலரிடம் கேட்டபோது அவர்கள் கூறியதாவது:​ சுப்பாராவ்:​ (துர்கா மெட்ரிகுலேசன் பள்ளி, கோடம்பாக்கம்) எங்கள் பள்ளிக்கு எல்.கே.ஜி.க்கு ரூ.3,500 நிர்ணயம் செய்திருப்பதை ரூ.7 ஆயிரமாக உயர்த்தி கேட்டுள்ளோம். பிளஸ்​2க்கு ரூ.7 ஆயிரம் நிர்ணயித்ததை ரூ.15 ஆயிரம் கல்வி கட்டணம் வசூலிக்க அனுமதி கேட்டுள்ளோம். டி.டி. அரசு:​(டி.டி.ஒ. மெட்ரிகுலேசன் பள்ளி, சூளைமேடு) எல்.கே.ஜி.க்கு ரூ.2050 அரசு நிர்ணயித்துள்ளது. இதை ரூ.10 ஆயிரமாக உயர்த்தி கேட்டுள்ளோம். பிளஸ்​2 க்கு ரூ.16 ஆயிரம் வசூலிக்க அனுமதி கோரி உள்ளோம்.

புருஷோத்தமன்:​ (எவர்வின் மெட்ரிக் பள்ளி, கொளத்தூர்) எங்கள் பள்ளிக்கு எல்.கே.ஜி. வகுப்புக்கு ரூ.5 ஆயிரம் நிர்ணயித்திருந்தனர். இதை ரூ.13 ஆயிரமாக உயர்த்தி தர கேட்டுள்ளோம்.  பிளஸ்​2 வகுப்புக்கு ரூ.11 ஆயிரம் நிர்ணயித்துள்ளதை ரூ.28 ஆயிரத்திற்கு உயர்த்தி தருமாறு கேட்டுள்ளோம்.

ஆக, வந்திருந்த நிர்வாகிகள் அனைவருமே அரசு நிர்ணயித்துள்ள தொகையைக்காட்டிலும் குறைந்தபட்சம் இரு மடங்காவது அதகரித்துத் தரவேண்டும் என்றே கோரிக்கை வைத்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்