முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இங்கிலாந்து - நெதர்லாந்து அணிகள் இன்று பலப்பரிட்சை

செவ்வாய்க்கிழமை, 22 பெப்ரவரி 2011      தமிழகம்
Image Unavailable

 

நாக்பூர், பிப். 22 - உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் நாக்பூரில் இன்று நடக்க இருக்கும் லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து மற்றும் நெதர்லாந்து அணிகள் மோத இருக்கின்றன. இது பற்றிய விரபரம் வருமாறு - 

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் 5 - வது லீக் ஆட்டம் மரா  ட்டிய மாநிலம் நாக்பூரில் இன்று நடக்கிறது. இதில் பி பிரிவில் உள்ள இங்கிலாந்து மற்றும் நெதர்லாந்து அணிகள் மோதுகின்றன. 

இங்கிலாந்து அணி உலக தரவரிசைப் பட்டியலில் 5 -வது இடத்தில் உள்ளது. 3 முறை உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்குள் நுழைந்து ம் கோப்பையை பெற முடியாத அதிர்ஷ்டம் இல்லாத அணி இங்கி லாந்து ஆகும். 

1992 - ம் ஆண்டுக்குப் பிறகு அந்த அணி உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது இல்லை. கடந்த 1996 -ம் ஆண்டு காலிறுதிச் சுற்றில் தோல்வி அடைந்து போட்டியில் இருந்து வெளியேறியது. 

இதனால் இந்த உலகக் கோப்பையில் தனது சிறப்பான பங்களிப்பை வெளிப்படுத்த வேண்டிய நிலையில் உள்ளது. 4 -வது உலகக் கோப் பையில் விளையாடும் நெதர்லாந்தை அந்த அணி எளிதில் வீழ்த்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

அதே நேரத்தில் தரவரிசையில் 12 -வது இடத்தில் இருக்கும் நெதர்லாந் து அணி இங்கிலாந்துக்கு அதிர்ச்சி கொடுக்கும் வகையில் விளையாட திட்டமிட்டு உள்ளது. 

உலகக் கோப்பை போட்டியைப் பொறுத்தவரை நெதர்லாந்து அணியை ஏற்கனவே 2 முறை இங்கிலாந்து வீழ்த்தி இருந்தது. தற்போது 3 - வது முறையாக சந்திக்கிறது. பகல் இரவாக நடக்கும் இந்த ஆட்டம் பிற்பகல் 2. 30 மணிக்கு துவங்குகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்