முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முதுகுளத்தூரில் பஸ் மறியல் - 300 பேர் மீது வழக்கு

செவ்வாய்க்கிழமை, 22 பெப்ரவரி 2011      தமிழகம்
Image Unavailable

 

கடலாடி பிப் 22 - முதுகுளத்தூர் அருகே ஆட்டோ டிரைவர் கொலை செய்யப்பட்டதால் உறவினர்கள் பஸ் மறியல் செய்த சம்பவத்தை யொட்டி போலீசார் 300 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்.முதுகுளத்தூர் அருகே உள்ள கீழசாக்குளம் கிராமத்தை சேர்ந்தனர் கிழவன் மகன் துரை பாண்டியன், இவருக்கு மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளன. வெளிநாட்டில் வேலை பார்த்து விட்டு விடுமுறைக்கு  ஊருக்கு வந்த துறை பாண்டியன் சில நாட்களாக  ஆட்டோ ஓட்டி வந்துள்ளார். இந்நிலையில் நேற்று 20 -ம் தேதி காலையில் கீழமானாங்கரை, காத்தாக்குளம் கிராமத்திற்கு செல்லும் விழக்கு ரோட்டில் மர்மான முறையில் துறை பாண்டியன் வெட்டி படுகொலை செய்யப்பட்ட நிலையில் பினமாக கிடந்தார் அவர் அருகேயே அவருடைய ஆட்டோவும் கிடந்தது. தகவல் அறிந்த காவல் துறையினர் துரை பாண்டியன் உடலை பிரேத பரிசோதனைக்காக எடுத்துச் செல்லையில் உறவினர்கள் திடீரென முதுகுளத்தூர் பஸ் நிலையத்தில் துறை பாண்டியன் சடலத்துடன் பஸ் மறியலில் ஈடுபட்டனர். 

பாதிக்கப்பட்டவரின் மனைவிக்கு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும் என பஸ் மறியலின் போது கோரிக்கை வைக்கப்பட்டது இதனை அடுத்து ஆர்.டி.ஒ. சண்முகையா பஸ் மறியலில் ஈடுபட்டவர்களிடம் சமரசம் ஏற்படாததால் மாவட்ட எஸ்.பி. அனில் குமார் கிரி தலைமையில் போலீசார் தடியடி மற்றும் துப்பாக்கி சூடு நடத்தி கூட்டத்தை களைத்தனர். பின்னர் துறை பாண்டியன் சடலத்தை போலீசார் எடுத்து சென்று பரமக்குடி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்து கிழ சாக்குளம் கிராமத்தில் துறை பாண்டியின் உடலை அடக்கம் செய்தனர். பஸ் மறியல் சம்பவம் தொடர்பாக முதுகுளத்தூர் காவல் நிலையத்தில் வருவாய் ஆய்வாளர் ராம மூர்த்தி கொடுத்த புகாரின் பேரில் மாட சாமி,

கிருஷ்ணன், நடராஜன், ஜேம்ஸ், செல்லப்பாண்டி, குரு சாமி, பால் ராஜ், உள்பட 300 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். 

நிருபர் மீது பொய் வழக்கு 

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் பல ஆண்டுகளாக வன்முறை சம்பவங்கள் நடைபெற்று வருகின்றது. இது போன்ற சம்பவங்களால் இப்பகுதியில் பொதுமக்களிடையே பீதியை ஏற்படுத்தி வருகிந்றனர்.

இந்நிலையில் முதுகுளத்தூர் தாலுகாவில் தினத்தந்தி, தினமலர், தினகரன், தினபூமி, தமிழ்ச்சுடர், தினச்சூரியன், ஜெயாடிவி ஆகிய பத்திரிக்கைகளுக்கு 

நிருபர்கள் செய்தி சேகரித்துக்கொண்டு பணிபுரிந்து வருகின்றனர். ஒவ்வொறு கலவரத்தின் போதும் செய்திகளை சேகரித்து பத்திரிக்கைகளில் வெளியிடுவது ஜனநாயக முறையாகும் இதனால் காவல் துறையினருக்கும் பத்திரிக்கையாளர்களுக்கும் கருத்து வேறுபாடு ஏற்படுகிறது. இதனிடைய முதுகுளத்தூரில் செய்தி சேகரிக்கச் சென்ற நிருபர் பூமி நாதன் மீது போலீசார் பொய் வழக்கு பதிவு செய்துள்ளனர். இது குறித்து பத்திரிக்கையாளர் மன்றங்கள் கண்டனம் தெரிவித்து ராமநாதபுரம் மாவட்ட கலெக்ட்டரிடம் காவல் துறைமீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் மனு அளித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்