முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் தோல்வி - சேவாக்

வியாழக்கிழமை, 28 ஏப்ரல் 2011      விளையாட்டு
Image Unavailable

 

புது டெல்லி, ஏப். 28 -  ஐ.பி.எல். டி - 20 கிரிக்கெட் தொடரில் டெல்லியில் நடந்த லீக் ஆட்ட த்தில் மோசமான பந்து வீச்சால் பெங்களூர் அணியிடம் தோல்வி அடைந்தோம் என்று டெல்லி அணிக் கேப்டன் வீரேந்தர் சேவாக் வே தனையுடன் தெரிவித்தார். இது பற்றிய விபரம் வருமாறு - 

ஐ.பி.எல். 20  ஓவர் கிரிக்கெட் போட்டியில் டெல்லி பெரோஷா கோ ட்லா மைதானத்தில் நடந்த லீக் ஆட்டத்தில் பெங்களூர் ராயல் சேல ஞ்சர்ஸ் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி அணியை வீழ்த்தி யது. 

இந்தப் போட்டியில் முதலில் விளையாடிய டெல்லி அணி நிர்ணயிக் கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட்டை இழந்து 160 ரன் எடுத்தது. இதில் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனான ஹோப்ஸ் 43 பந்தில் 54 ரன்னை எடுத் தார். 

பின்னர் ஆடிய பெங்களூர் அணி 19.3 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 161 ரன்னை எடுத்தது. விராட் கோக்லி 38 பந்தில் 58 ரன் (8 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்தார். இறுதியில் ஆட்டநாயகனாக அவர் தேர்வு செய்ய ப்பட்டார். 

பெங்களூர் அணி பெற்ற 3 -வது வெற்றி இதுவாகும். இதன் மூலம் அந்த அணி 7 புள்ளிகள் பெற்று 2 -வது இடத்திற்கு முன்னேறியது. டெ ல்லி அணி 4 -வது தோல்வியைத் தழுவியது. 4 புள்ளிகளுடன் அந்த அணி 9 - வது இடத்தில் உள்ளது. 

பெங்களூர் அணியிடம் 3 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந் தது குறித்து டெல்லி அணியின் கேப்டனான வீரேந்தர் சேவாக்கிடம் நிருபர்கள் கேட்ட போது, அவர் அளித்த பதில் வருமாறு - 

எங்களது விருப்பத்துக்கு ஏற்றவாறு ஆடுகளம் அமையவில்லை. ஆனாலும் எங்களது தோல்விக்கு மோசமான பந்து வீச்சே காரணம். இந்த ஆடுகளத்தில் பேட்டிங் செய்வது சிரமமானது. பந்தை தூக்கி அடிப்பது கடினமாக இருந்தது. 

முதல் 6 ஓவரில் பெளலர்கள் ரன்களை வாரி கொடுத்து விட்டனர். பின்னர் மார்கெல், சிறப்பாக பந்து வீசினார். ஆட்டத்தின் இறுதிக் கட்டத்தில் சரியாக பந்து வீசப்படவில்லை. 

இந்த தோல்வியால் டெல்லி அணிக்கு கூடுதல் நெருக்கடி ஏற்பட்டு இருப்பது உண்மைதான். இனிவரும் ஆட்டங்களில் சிறப்பாக ஆடு வோம் என்று நம்புகிறேன். இவ்வாறு அவர் கூறினார். 

இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்ற பெங்களூர் அணிக் கேப்டன் வெட்டோரி கூறியதாவது - கோக்லி, கெய்ல் ஜோடி 82 ரன் சேர்த்தது ஆட்டத்தின் முக்கிய அம்சமாகும். 

கோக்லியின் ஆட்டம் மிகவும் அபாரமாக இருந்தது. 8 -வது விக்கெட் டுக்கு என்னுடன் இணைந்த செய்யது மொகமது பொறுப்புடன் ஆடி னார். எங்களது பந்து வீச்சு மிகவும் நன்றாக இருந்தது. இவ்வாறு அவர் கூறினார். 

கேப்டன் டேனியல் வெட்டோரி தலைமையிலான பெங்களூர் அணி அடுத்த ஆட்டத்தில் புனே வாரியர்ஸ் அணியை வரும் 29 -ம் தேதி சந்தி க்கிறது. கேப்டன் சேவாக் தலைமையிலான டெல்லி அணி இன்று கொல்கத்தா அணியுடன் மோத இருக்கிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்