முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐ.பி.எல். போட்டி - டெக்கான் சார்ஜர்ஸ் அபார வெற்றி

வெள்ளிக்கிழமை, 29 ஏப்ரல் 2011      விளையாட்டு
Image Unavailable

 

கொச்சி, ஏப். 29 - இந்தியன் பிரீமியர் லீக் 20 -க்கு 20 போட்டியில் கொச்சியில் நடைபெ ற்ற லீக் ஆட்டத்தில், டெக்கான் சார்ஜர்ஸ் அணி 55 ரன் வித்தியாசத்தி ல் அபார வெற்றி பெற்று இந்தத் தொடரில் முன்னிலை பெற்று உள்ளது. 

குறைந்த ஸ்கோரைக் கொண்ட இந்தப் போட்டியில் டெக்கான் அணி தரப்பில், கேப்டன் சங்கக்கரா மற்றும் ஒயிட் இருவரும் நன்கு பேட்டி ங் செய்து அணி கெளரவமான ஸ்கோரை எடுக்க உதவினர். 

பின்பு பெளலிங்கின் போது, முன்னணி வேகப் பந்து வீச்சாளரான இஷாந்த் சர்மா நன்கு பந்து வீசி 5 முக்கிய விக்கெட்டுகளைக் கைப்பற் றினார். அவருக்கு ஆதரவாக ஸ்டெயின், கோனி மற்றும் ஏ. மிஸ்ரா ஆகியோர் பந்து வீசினர். 

ஐ.பி.எல். டி - 20 போட்டியில் கொச்சியில் உள்ள நேரு அரங்கத்தில் 32 - வது லீக் ஆட்டம் நடந்தது. இதில் ஐதராபாத் டெக்கான் சார்ஜர்ஸ் அணியும், கொச்சி டஸ்கர்ஸ் கேரளா அணியும் மோதின. 

முன்னதாக இதில் டாசில் வெற்றி பெற்ற கொச்சி அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. டெக்கான் அணி தரப்பில், எஸ். தவான் மற்றும் சோ கல் இருவரும் ஆட்டத்தை துவக்கினர். 

ஆனால் முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய டெக்கான் அணி ரன் எடுக்க திணறியது. இறுதியில் அந்த அணி, 20 ஓவரில் 7 விக்கெட் இழ ப்பிற்கு 129 ரன்னை எடுத்தது. அந்த அணி சார்பில் ஒரு வீரர் அரை சத மும், ஒரு வீரர் கால் சதமும் எடுத்தனர். மற்ற வீரர்கள் குறைந்த ரன்னி ல் ஆட்டம் இழந்தனர். 

கொச்சி தரப்பில், வினய் குமார் 25 ரன்னைக் கொடுத்து 3 விக்கெட் எடுத்தார். ஆர். பி. சிங் 21 ரன்னைக் கொடுத்து 2 விக்கெட் எடுத்தார். தவிர, பெரீரா ஒரு விக்கெட் எடுத்தார். 

கொச்சி அணி 130 ரன்னை எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற இலக் கை டெக்கான் அணி வைத்தது. ஆனால் அடுத்து களம் இறங்கிய அந்த அணி 16.3 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 74 ரன்னில் சுரு ண்டது. 

இதனால் டெக்கான் அணி இந்த லீக் ஆட்டத்தில், 55 ரன் வித்தியாசத் தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் டெக்கான் அணிக்கு 2 வெ ற்றிப் புள்ளிகள் கிடைத்தது. 

கொச்சி அணி சார்பில், முன் வரிசை வீரர்கள் மோசமாக ஆடி அவுட்டாகி பெவிலியன் திரும்பினர். இதுவே அந்த அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது. பின் வரிசை வீரர்களின் ஆட்டத்தால் அந்த அணி மோசமான தோல்வியில் இருந்து தப்பியது. 

ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா அதிகபட்சமாக, 35 பந்தில் 23 ரன்னை எடுத்தார். இதில் 2 பவுண்டரி அடக்கம். பெரீரா 23 பந்தில் 22 ரன்னை எடுத்தார். தவிர, வினய் குமார் 19 பந்தில் 18 ரன்னை எடுத்தார். முன் வரிசை வீரர்களில் 5 பேர் பூஜ்யத்தில் ஆட்டம் இழந்தனர். 

டெக்கான் அணி தரப்பில், இளம் வேகப் பந்து வீச்சாளரான இஷாந்த் சர்மா 12 ரன்னைக் கொடுத்து 5 விக்கெட் வீழ்த்தினார். ஸ்டெயின் 16 ரன்னைக் கொடுத்து 3 விக்கெட் எடுத்தார். தவிர, கோனி மற்றும் மிஸ்ரா ஆகியோர் தலா ஒரு விக்கெட் எடுத்தனர். இந்தப் போட்டியின் ஆட்டநாயகனாக இஷாந்த் சர்மா தேர்வு செய்யப்பட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago