முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்காவில் சூறாவளி 300 பேர் பலி அவசரநிலை பிரகடனம்

வெள்ளிக்கிழமை, 29 ஏப்ரல் 2011      உலகம்
Image Unavailable

பிர்மிங்ஹாம்,  ஏப். - 30 - அமெரிக்காவினஅ தென் பகுதியில் ஏற்பட்ட சூறாவளி புயலுக்கு இதுவரை 300 பேர் பலியாகி உள்ளனர். இதனால் அப்பகுதியில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.. அமெரிக்காவில் தென்பகுதியில் கடந்த ஒருவாரமாக வீசி வரும் கடுமையான சூறாவளி புயலால் மிசிசிபி, அர்கன்காஸ், அலபாமா, கென்டுகி, மிசெளரி உள்ளிட்ட மாகாணங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்த மாகாணங்களின் பல்வேறு பகுதிகளில் கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகியுள்ளன. சுனாமி போன்று காற்று வீசுவதால் வாகனங்கள் தூக்கி எறியப்படுகின்றன. இந்த சூறாவளிபுயலில் அலபாமா மாகாணம் தான் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இங்கு மட்டும் 162 பேர் பலியாகியுள்ளனர். 150 பேர் காயமடைந்துள்ளனர். அதிபர் ஒபாமா நேற்று அப்பகுதிக்கு சென்று பார்வையிட்டார். பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறினார். இம்மாகாணத்தில் துஸ்காலீஸியா நகரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதேநிலைதான் சார்ஜியா, மிசிசிபி மாகாணங்களிலும் உள்ளது. புயல் மழைக்கு இதுவரை 300 பலியாகியுள்ளனர். தொடர்ந்து புயல் வீசுவதால் சாவு எண்ணிக்கை உயரும் என்று அஞ்சப்படுகிறது. இதனிடையே புயல் பாதித்த அலபாமா, ஆர்கன்சாஸ், கென்டுகி, மிசிசிபி, மிசெளரி, டென்னிசீ, ஒகலகோமா ஆகிய 6 மாகாணங்களில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்படடுள்ளது. புயல் பாதித்த மாகாணங்களில் மீட்பு நடவடிக்கையை துரிதப்படுத்தும் படி அதிபர் ஒபாமா உத்தரவிட்டுள்ளார். மேலும் 21 கடற்கரை மாகாணங்களில் தட்பவெப்ப நிலை மோசமாக உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அங்கு முன்எச்சரிக்கை நடவடிக்கையும் மேற்ரகொள்ளப்பட்டுள்ளது.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்