முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜாஹிர்கானின் உதவியால் அபாரமாக பந்து வீசினேன் - இஷாந்த் நெகிழ்ச்சி

சனிக்கிழமை, 30 ஏப்ரல் 2011      விளையாட்டு
Image Unavailable

கொச்சி, ஏப். - 30  - இந்தியன் பிரீமியர் லீக் 20 -க்கு 20 தொடரில் கொச்சி அணிக்கு எதிரா  ன ஆட்டத்தில், ஜாஹிர்கானின் உதவியால் அபாரமாக பந்து வீசினேன், இதுவே எனது வெற்றிக்கு காரணம் என்று டெக்கான் அணியின் முன்னணி பந்து வீச்சாளரான இஷாந்த் சர்மா தெரிவித்தார். இது பற்றிய விபரம் வருமாறு -  ஐ.பி.எல். தொடரில் கொச்சியில் உள்ள நேரு அரங்கத்தில் 28 -ம் தேதி லீக் ஆட்டம் நடந்தது. இதில் கேப்டன் சங்கக்கரா தலைமையிலான டெக்கான் சார்ஜர்ஸ் அணியும், கேப்டன் ஜெயவர்த்தனே தலைமையி லான கொச்சி டஸ்கர்ஸ் அணியும் மோதின.
கொச்சி அணிக்கு எதிரான இந்த ஆட்டத்தில், இஷாந்த் சர்மாவின் அபார பந்து வீச்சால் அந்த அணி சிதறியது. இறுதியில் டெக்கான் அணி இதில் அபார வெற்றி பெற்றது.
பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தில் முதலில் விளையாடிய டெக் கான் சார்ஜர்ஸ், கொச்சி அணியின் பந்து வீச்சால் திணறியது. இறுதியி ல் அந்த அணி 7 விக்கெட் இழப்புக்கு 129 ரன்களை எடுத்தது.  
டெக்கான் அணியின் கேப்டனான சங்கக்கரா பொறுப்புடன் ஆடினா ர். அவர் அதிகபட்சமாக 47 பந்தில் 65 ரன்னும், ஒயிட் 31 ரன்னும் எடுத் தனர். வினய் குமார் 3 விக்கெட்டும், ஆர். பி.சிங் 2 விக்கெட்டும் எடுத் தனர்.
பின்னர் ஆடிய கொச்சி அணி 16.3 ஓவரில் 74 ரன்னில் சுருண்டது. இதி ல் டெக்கான் பெளலர்கள் மிக நேர்த்தியாக பந்து வீசினர். இதனால் டெக்கான் அணி 55 ரன்னில் வெற்றி பெற்றது.
ரவீந்திர ஜடோஜா அதிகபட்சமாக 23 ரன் எடுத்தார். டெக்கான் அணி தரப்பில், இளம் வீரரான இஷாந்த் சர்மா 12 ரன் கொடுத்து 5 விக்கெட் சாய்த்து கொச்சி அணி சரிவுக்கு முக்கிய பங்கு வகித்தார்.
அவர் ஒரே ஓவரில் 2 விக்கெட் கைப்பற்றி முத்திரை பதித்தார். டெக் கான் சார்ஜர்ஸ் பெற்ற 3 - வது வெற்றி இதுவாகும். அந்த அணி 8 வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வரும் 1 -ம் தேதி எதிர்கொள்கிறது.
கொச்சி அணி 4 -வது தோல்வியைத் தழுவியது. அந்த அணி 8 -வது லீக் ஆட்டத்தில் டெல்லி அணியை வரும் 30 -ம் தேதி சந்திக்கிறது என்பது நினைவு கூறத்தக்கது.
கொச்சி அணிக்கு எதிரான போட்டியில் ஆட்டநாயகன் விருது பெற்ற
டெக்கான் சார்ஜர்ஸ் வீரர் இஷாந்த் சர்மா நிருபர்களின் கேள்விக்கு அளித்த பதில் வருமாறு -
எனது பந்து வீச்சு இந்த அளவிற்கு மேம்பட்டு இருப்பதற்கு ஜாஹிர் கான் தான் காரணம். நான் இந்த அளவுக்கு பந்து வீச அவர் உதவியாக இருந்தார். அவர் எனக்கு ஏராளமான ஆலோசனைகளை வழங்கி இருந்தார்.
எனது உடல் தகுதி பற்றியும், கடினமான பயிற்சி செய்வது பற்றியும் ஆலோசனை கூறி இருந்தார். இதனால் அவருக்கு நன்றி சொல்வது அவசியமாகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
கொச்சியில் நடந்த இந்த லீக் ஆட்டத்தில் வெற்றி பெற்றது குறித்து டெக்கான் அணியின் கேப்டனான குமார் சங்கக்கரா நிருபர்களின் கே ள்விக்கு அளித்த பதில் வருமாறு -
நாங்கள் பேட்டிங் செய்யும் போது, இந்த ஆடுகளத்தில் 130 - 140 ரன் என்பது நல்ல ஸ்கோர் என்று கருதினோம். அதற்கேற்றவாறு எங்களது அணியின் ஸ்கோர் அமைந்தது.
முதலில் 6 ஓவரில் ஸ்டெயின் - இஷாந்த் அபாரமாக பந்து வீசி ஆட்ட த்தை எங்களது பக்கம் கொண்டு வந்தனர். பயிற்சியாளர் லீமேனின் நம்பிக்கை வெற்றிக்கு காரணமாக இருந்தது. இவ்வாறு அவர் கூறி  னார்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்