முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மே.இ.தீவுக்கு எதிரான கிரிக்கெட் தொடர் முன்னணி இந்திய வீரர்கள் ஆட வேண்டும்

சனிக்கிழமை, 30 ஏப்ரல் 2011      விளையாட்டு
Image Unavailable

புது டெல்லி, ஏப். - 30  - அடுத்த மாதம் துவங்க இருக்கும் மேற்கு இந்தியத் தீவுக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் முன்னணி இந்திய வீரர்கள் பங்கு கொள்ள வே ண்டும் என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் விருப்பம் தெரிவித்து உள்ளது. இது பற்றிய விபரம் வருமாறு -  இந்தியன் பிரீமியர் லீக் 20 -க்கு 20 போட்டிகள் தற்போது நடந்து வரு கிறது. தற்போது விறுவிறுப்பான கட்டத்தில் நடந்து கொண்டு இருக் கும் இந்தப் போட்டி அடுத்த மாதம் 28 -ம் தேதியுடன் முடிவடைகிறது.
இந்தப் போட்டி முடிந்த பிறகு, இந்திய அணி கேப்டன் தோனி தலை மையில் மேற்கு இந்தியத் தீவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு கேப் டன் டேரன் சம்மி தலைமையிலான அணிக்கு எதிராக விளையாட இருக்கிறது.
மேற்கு இந்தியத் தீவுகள் அணி மற்றும் இந்திய அணிகளுக்கு இடையே 3 டெஸ்ட், 5 ஒரு நாள் போட்டி மற்றும் ஒரே ஒரு 20 ஓவர் போட்டி ஆகியவை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்தத் தொடர் ஜூன் மாத ம் 4 -ம் தேதி துவங்குகிறது.
உலகக் கோப்பை போட்டி , ஐ.பி.எல். என தொடர்ந்து போட்டிகளி ல் விளையாடி வருவதால், மே.இ.தீவுக்கு எதிரான தொடரில் ஓய்வு தருமாறு இந்திய அணியின் முன்னணி வீரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கேப்டன் தோனி, டெண்டுல்கர், சேவாக், ஹர்பஜன்சிங், ஜாஹிர்கா ன், காம்பீர் ஆகிய முன்னணி வீரர்கள் ஓய்வு எடுக்க விருப்பம் தெரிவி த்து உள்ளனர். இது தொடர்பாக அவர்கள் கிரிக்கெட் வாரியத்துக்கு ஏற்கனவே கடிதம் எழுதி இருந்தனர்.
முன்னணி வீரர்களுக்கு ஓய்வு கொடுப்பது தொடர்பாக இந்திய கிரிக் கெட் வாரியம் இன்னும் எந்தவிதமான முடிவையும் எடுக்கவில்லை. இது குறித்து வாரிய நிர்வாகிகள் பரிசீலித்து வருகின்றனர்.
இந்த நிலையில், மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான தொடரி ல் இந்திய முன்னணி வீரர்கள் பங்கேற்க வேண்டும் என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) விருப்பம் தெரிவித்து உள்ளது. இது தொடர்பாக ஐ.சி.சி.யின் தலைமை நிர்வாக அதிகாரி ஹாரூன் லார்கட் கூறியதாவது -
வெஸ்ட் இன்டீசுக்கு எதிரான தொடரில் இந்திய முன்னணி வீரர்கள் ஆடாமல் இருப்பது நல்லதல்ல. இதனால் கிரிக்கெட்டின் தன்மை பாதிக்கப்படும். முழு பலம் பெற்ற இந்திய அணி இந்தத் தொடரில் ஆட வேண்டும்.
ஒன்று அல்லது இரண்டு வீரர்கள் ஓய்வு கேட்டால் பரவாயில்லை. 5 அல்லது 6 வீரர்கள் ஓய்வு கேட்டால் அது சரியல்ல. முழு அளவிலான இந்திய அணி பங்கேற்காவிட்டால் அது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்