முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நேட்டோ படைகள் வான் தாக்குதல்: கடாபியின் இளைய மகன் மற்றும் 3 பேரன்கள் பலி

ஞாயிற்றுக்கிழமை, 1 மே 2011      உலகம்
Image Unavailable

திரிபோலி,மே.- 2 - நேட்டோ கூட்டுப் படைகள் நடத்திய வான் தாக்குதலில் லிபியா அதிபர் கடாபியின் இளைய மகன் ஷேப் அல் அராப் மற்றும் கடாபியின் மூன்று பேரன்கள் ஆகியோர் கொல்லப்பட்டதாக லிபியா அரசே நேற்று தெரிவித்தது.  இது குறித்து லிபியா நாட்டு அரசின் மேலிட பிரதிநிதி இப்ராகிம் திரிபோலியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது கூறிய அவர், நேட்டோ கூட்டு படைகள் தாக்குதலில் ஷேப் அல் அராப்(கடாபி மகன், வயது 29) மற்றும் அவரது 3 பேரன்கள் கொல்லப்பட்டதாக தெரிவித்தார். ஷேப் அல் அராபின் வீடு கூட்டு படைகளால் முழுமூச்சோடு தாக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
அந்த நேரத்தில் அந்த வீட்டில் அதிபர் கடாபி, அவரது மனைவி மற்றும் நண்பர்கள், உறவினர்கள் ஆகியோரும் இருந்தார்களாம். இருந்தாலும் இந்த தாக்குதலில் இருந்து லிபியா அதிபர் கடாபி எந்த காயமும் இன்றி தப்பி விட்டதாகவும் அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார். மேலும் கடாபி நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதாகவும் அவருக்கு எந்த காயமும் ஏற்படவில்லை என்றும் அவர் கூறினார். ஆனால் மற்றவர்களுக்கு காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
லிபியா அதிபரை கொல்வதற்காக நேரடியாக நடத்தப்பட்ட தாக்குதல் இது என்பது குறிப்பிடத்தக்கது. லிபியா அதிபரின் மகன் மற்றும் பேரன்கள் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு அந்நாட்டு மக்கள் மகிழ்ச்சியடைந்து பட்டாசு வெடித்து கொண்டாடியதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. எகிப்தில் முபாரக்கை விரட்டியடித்தது போல லிபியா அதிபர் கடாபியையும் விரட்டியடிக்க அந்நாட்டு மக்கள் போராடி வருகிறார்கள். அமெரிக்க கூட்டு படைகளும் தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்த தாக்குதலில்தான் கடாபியின் இளைய மகன் மற்றும் பேரன்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.   
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்