முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்காவில் சூறாவளி சாவு எண்ணிக்கை உயர்வு

ஞாயிற்றுக்கிழமை, 1 மே 2011      உலகம்
Image Unavailable

வாஷிங்டன்,மே.- 2 - அமெரிக்காவில் வீசிய கடும் சூறாவளி காற்றில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 324 ஆக உயர்ந்துள்ளது. அமெரிக்காவில் அதிகம் பேரை பலி வாங்கிய சூறாவளியாக இது கருதப்படுகிறது.  கடந்த 80 ஆண்டுகளுக்கு பிறகு கடுமையான சேதத்தை ஏற்படுத்தி உள்ள இந்த சூறாவளியில் சிக்கி அலபாமாவில் 228 பேரும், மிஸிஸிப்பியில் 34 பேரும், அர்கன்சாஸில் 8 பேரும், டென்னஸில் 34 பேரும், ஜார்ஜியாவில் 15 பேரும், வர்ஜீனியாவில் 5 பேரும் உயிரிழந்துள்ளதாக அதிகாரபூர்வ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதற்கு முன்பு 1932 ம் ஆண்டு அமெரிக்காவின் 6 மாகாணங்களை தாக்கிய கடும் சூறாவளியில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 332 ஆகும். கடந்த 1925 ல் மூன்று மாகாணங்களில் வீசிய கடும் சூறாவளிக்கு பலியானோர் எண்ணிக்கை 747 ஆகும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்