முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பின்லேடனைக் கொல்வதற்காக அமெரிக்காவின் அதிரடி தாக்குதல்

திங்கட்கிழமை, 2 மே 2011      உலகம்
Image Unavailable

 

வாஷிங்டன், மே 3 - சர்வதேச பயங்கரவாதி ஒசாமா பின்லேடனை கொல்வதற்கு பாகிஸ்தான் அரசுக்கே தெரியாமல் அமெரிக்கா அதிரடி தாக்குதலை நடத்தியுள்ளது. பின்லேடனைக் கொன்று போடும்வரை இந்த தாக்குதல் பாகிஸ்தான் ராணுவத்திற்கோ அல்லது அரசுக்கோ தெரியாது. கடந்த 10 ஆண்டுகளாக பாகிஸ்தானில் தலைமறைவாக இருந்த அல் காய்தா தலைவன் ஒசாமா பின்லேடனை அபோடாபாத் என்ற இடத்தில் உள்ள ஒரு விடுதியில் அமெரிக்க அதிரடிப்படை வீரர்கள் இரவு நேரத்தில் ஹெலிகாப்டரில் வந்து சுட்டுக் கொன்றனர். ஒசாமா பின்லேடனின் நண்பர் ஒருவரின் துப்பு மூலம் பின்லேடன் தங்கியிருந்த ரகசிய இடத்தை அமெரிக்க உளவுப் படையான சி.ஐ.ஏ. கண்டுபிடித்ததாக கூறப்படுகிறது. 

மூன்று நாட்களுக்கு முன்பே இந்த இடத்தை சி.ஐ.ஏ. உளவுப் படையினர் கண்டுபிடித்து விட்டனர். ஆனால் இங்கே தாக்குதலை நடத்தப்போவதாக அமெரிக்க ராணுவம் பாகிஸ்தான் ராணுவத்திற்கோ, அரசாங்கத்திற்கோ எந்த தகவலையும் கொடுக்கவில்லை. இந்த திட்டத்தை அமெரிக்கா ரகசியமாகவே வைத்திருந்து நேற்று அதிகாலை அதிரடியாக நிறைவேற்றியது. மொத்தம் 4 ஹெலிகாப்டர்களில் அமெரிக்க வீரர்கள் அபோடாபாத்துக்கு வந்து அங்கு யாருக்கும் தெரியாமல் பின்லேடன் தங்கியிருந்த விடுதி மீது தாக்குதல் நடத்தி பின்லேடனை சுட்டுக் கொன்றனர். இரண்டு மாடிகளைக் கொண்ட இந்த விடுதிக்கும் பாகிஸ்தான் ராணுவ கல்லூரிக்கும் இடையே உள்ள மொத்த தூரம் வெறும் 100 கெஜம்தான். பின்லேடன் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு பிறகுதான் பாகிஸ்தான் ஜனாதிபதி ஆசிப் அலி ஜர்தாரிக்கு அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா பின்லேடன் கொல்லப்பட்ட விஷயத்தை தெரிவித்துள்ளார். 

பாகிஸ்தான் உள்பட வேறு எந்த நாட்டிற்கும் இந்த அதிரடி தாக்குதல் திட்டத்தை அமெரிக்கா முன்கூட்டியே தெரிவிக்கவில்லை. திட்டம் நிறைவேறிய பிறகுதான் பின்லேடன் கொல்லப்பட்ட விஷயம் மற்ற நாடுகளுக்கு தெரிவிக்கப்பட்டது என்று ஒபாமா அரசு நிர்வாகம் கூறியது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்