முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பின்லேடன் கொல்லப்பட்டதை அடுத்து இஸ்லாமாபாத்துக்கு பலத்த பாதுகாப்பு

செவ்வாய்க்கிழமை, 3 மே 2011      உலகம்
Image Unavailable

 

இஸ்லாமாபாத், மே 3 - அல் கொய்தா தலைவர் ஒசாமா பின்லேடனை அமெரிக்க படையினர் சுட்டு வீழ்த்தியதை அடுத்து இஸ்லாமாபாத்தில் உச்சக்கட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சர்வதேச பயங்கரவாதியும் அல் கொய்தா தீவிரவாத இயக்கத்தின் தலைவனுமான ஒசாமா பின்லேடனை பாகிஸ்தானில் உள்ள அபோட்டாபாத் என்ற இடத்தில் அமெரிக்க அதிரடிப்படையினர் ஹெலிகாப்டரில் வந்து சுட்டுக் கொன்றனர். இந்த சம்பவம் உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உச்சக்கட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இஸ்லாமாபாத்தில் உள்ள வெளிநாட்டு தூதரகங்களுக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளன. குறிப்பாக அமெரிக்க தூதரகத்தைச் சுற்றி யாரும் நுழைய முடியாத அளவுக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இஸ்லாமாபாத்தில் உள்ள முக்கிய தலைவர்களின் வீடுகள், அலுவலகங்கள் ஆகியவற்றுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.  பெஷாவர், லாகூர், கராச்சி ஆகிய இடங்களில் உள்ள அமெரிக்க துணை தூதரகங்களுக்கும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த பாதுகாப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக இஸ்லாமாபாத்தில் உள்ள அமெரிக்க பள்ளிக்கூடம் ஒன்று மூடப்பட்டுள்ளது. 

பின்லேடன் கொல்லப்பட்டதை அடுத்து அரசு உயர் அதிகாரிகள், போலீஸ் உயர் அதிகாரிகள், உளவுத் துறை அதிகாரிகள் அடங்கிய உயர்மட்ட குழு கூட்டம் ஒன்றை பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் ரெஹ்மான் மாலிக் கூட்டி முக்கிய ஆலோசனை நடத்தினார். எந்தவிதமான அசம்பாவித சம்பவங்களையும் எதிர்கொள்ள தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளை மாலிக் கேட்டுக்கொண்டார். நான்கு மாகாணங்களில் உள்ள மிக முக்கியமான கட்டிடங்கள் மற்றும் அதிகாரிகளுக்கு பல அடுக்கு பாதுகாப்பை அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. பின்லேடன் கொல்லப்பட்ட செய்தி கிடைத்த உடனே பாகிஸ்தான் முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன என்று பாகிஸ்தான் அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்