முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஒசாமா கொல்லப்பட்டது அமெரிக்காவின் உளவு நடவடிக்கையே

புதன்கிழமை, 4 மே 2011      உலகம்
Image Unavailable

 

இஸ்லாமாபாத்,மே.4 - ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்டது அமெரிக்காவின் உளவுத்துறை சார்ந்த நடவடிக்கை என்று பாகிஸ்தான் கூறியுள்ளது. பின்லேடன் கொல்லப்பட்டதால் பயங்கரவாதிகளுக்கு மிகப் பெரிய பின்னடைவு ஏற்பட்டிருப்பதாகவும், பாகிஸ்தான் கூறியிருக்கிறது. 

தங்களது ராணுவ மையத்திற்கு அருகிலேயே ஒசாமா கொல்லப்பட்டிருப்பதால் பாகிஸ்தான் கடும் நெருக்கடியில் சிக்கியிருக்கிறது. அமெரிக்காவின் உளவு நடவடிக்கையில் ஒசாமா கொல்லப்பட்டார் என்று பாகிஸ்தானின் வெளியுறவு செய்தி தொடர்பாளர் தெமீனா ஜன்ஜூவா கூறியுள்ளார். 

உலகில் எந்த மூலையில் ஒசாமா இருந்தாலும் அவரை தேடிக் கண்டுபிடித்து அழிக்க வேண்டும் என்ற அமெரிக்காவின் கொள்கைப்படி இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றும் அவர் கூறியிருக்கிறார். எந்த நாட்டுக்கும் எதிராக தாக்குதல் நடத்துவதற்காக பாகிஸ்தான் மண்ணை பயங்கரவாதிகள் பயன்படுத்துவதற்கு அனுமதிக்க மாட்டோம் என்பதுதான் பாகிஸ்தானின் கொள்கை என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

பின்லேடன் கொல்லப்பட்டது குறித்து அதிபர் ஜர்தாரியிடம் அமெரிக்க அதிபர் ஒபாமா தொலைபேசியில் பேசியதாகவும் ஜன்ஜூவா கூறியுள்ளார். அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுடனும் உளவு தகவல்களை பகிர்ந்து கொள்வதற்கான ஏற்பாடுகளை பாகிஸ்தான் செய்து கொண்டிருப்பதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்