முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பின்லேடனை பிடிக்க ரூ. 60 லட்சம் கோடி செலவு செய்த அமெரிக்கா

புதன்கிழமை, 4 மே 2011      உலகம்
Image Unavailable

 

வாஷிங்டன்,மே.4 - பின்லேடனை பிடிக்க கடந்த 10 ஆண்டுகளாக ரூ. 60 லட்சம் கோடி செலவு செய்ததாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் பிரனன் வெள்ளை மாளிகையில் நிருபர்களிடம் கூறியதாவது, 

பின்லேடனை உயிருடன் பிடிக்க நாங்கள் திட்டமிட்டிருந்தோம். ஆனால் சூழ்நிலை அதற்கு உகந்ததாக இல்லை. பின்லேடன் எதிர் தாக்குதலை நடத்தியதால் துப்பாக்கி சண்டை நடந்து விட்டது. அப்போதும் கூட பெண்களையும், குழந்தைகளையும் அமெரிக்க வீரர்கள் எதுவும் செய்யவில்லை. பின்லேடன் பெண்களை பயன்படுத்தி தப்ப முயன்றார். ஒரு பெண்ணை பிடித்து தன் முன்பு நிறுத்தி கேடயமாக பயன்படுத்தினார். அவரை சுடுவதை தவிர ராணுவத்திற்கு வேறு வழியில்லை என்பதால் சுட்டுக் கொல்ல வேண்டியதாகி விட்டது. 

பின்லேடன் மாளிகையில் தனியாக இருந்ததால் பொதுமக்கள் யாருக்கும் பாதிப்பில்லாமல் அவரை உயிருடன் பிடித்து விட முடியும் என்றே நினைத்தோம்.  பின்லேடன் சகாக்களால் அதிரடிப்படை வீரர்கள் யாருக்கும் சிறு காயம் கூட ஏற்படக் கூடாது என்று ஒபாமா உத்தரவிட்டிருந்தார். தாக்குதலின் போது பின்லேடன் ரசாயன தாக்குதல் ஏதேனும் நடத்தக் கூடும் என எதிர்பார்த்தோம். ஆனால் அதிர்ஷ்டவசமாக அப்படி ஏதும் நடக்கவில்லை. அவர் சரணடைந்திருந்தால் தப்பியிருக்கலாம். அவர் சுட்டதால் கமாண்டோ வீரர்கள் மளமளவென சுட்டு தள்ளி விட்டனர். பின்லேடன் மீது எத்தனை ரவுண்டு குண்டுகள் பாய்ந்தது என்று எனக்கு தெரியாது. கடந்த சில மாதங்களாக இந்த தாக்குதல் திட்டம் குறித்து ஆலோசிக்கப்பட்டு வந்தது. தற்போது அது நிறைவேற்றப்பட்டு விட்டது. பின்லேடன் கேடயமாக பயன்படுத்திய பெண் அவரது மனைவிகளில் ஒருத்தராக இருக்கலாம் என கருதுகிறோம். இது குறித்து விசாரித்து வருகிறோம். பின்லேடனை பிடிக்க கடந்த 10 ஆண்டுகளில் அமெரிக்கா ரூ. 60 லட்சம் கோடி செலவிட்டுள்ளது. இன்னும் தேடுதல் வேட்டை தொடர்ந்திருந்தால் அடுத்த 10 ஆண்டுகளில் இந்த தொகை இரண்டு மடங்காகி இருக்கும். இப்போதே பின்லேடன் கொல்லப்பட்டு விட்டதால் அமெரிக்காவுக்கு பெருமளவு பணம் மிச்சமாகி விட்டது என்றார் அவர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்