முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்திய-மியான்மர் எல்லைகளை நிர்ணயிக்க முடியவில்லை

ஞாயிற்றுக்கிழமை, 30 ஜூன் 2013      இந்தியா
Image Unavailable

இம்பால், ஜூலை. 1 - இந்திய-மியான்மர் எல்லைகளை நிர்ணயிக்க முடியாத நிலையில் இரு அரசுகளும் இருப்பதாக மணிப்பூர் முதலமைச்சர் இபோபி சிங் தெரிவித்துள்ளார். மணிப்பூர் சட்ட சபையில், காங்கிரஸ் உறுப்பினர் ஒருவர் இந்திய-மியான்மர் எல்லை நிலைப்பாடு குறித்தான கவன ்ர்ப்புத் தீர்மானம் ஒன்றை கொண்டு வந்தார். அதற்குப் பதில் அளித்த மணிப்பூர் முதலமைச்சர் கூறியதாவது, மணிப்பூர் மாநிலத்தில் உள்ள மோரே அருகில் உள்ள இந்தியா-மியான்மர் எல்லையை நிர்ணயிக்க முடியாத அளவுக்கு, வேலியில் உள்ள 9 தூண்கள் தெரியவில்லை. அவை காணாமல் போயிருக்கலாம் அல்லது அடர்ந்த புற்களால் மூடப்பட்டிருக்கலாம். கண்காணிப்பு இல்லாத காடுகள் என்பதால் இதுபோன்று நடக்கின்றன. அதேசமயம் ஒவ்வொரு எல்லை தூணுக்கும் பாதுகாப்பு அளிப்பது சாத்தியம் இல்லை. இரு நாட்டு பிரதிநிதிகளும் இணைந்து இடத்தை அளந்து அதன்பின்னர் எல்லையை நிர்ணயிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பில்லர் காணாமல் போன பகுதியில் 10 கிலோ மீட்டர் நீளத்திற்கு வேலி அமைக்க திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. எல்லைப் பிரச்சினைக்கு தீர்வு கண்டபிறகு அந்த திட்டம் நிறைவேற்றப்படும். மோரே பகுதியில் ஒருங்கிணைந்த சோதனைச் சாவடி கட்டுமானப் பணிகளும் முடுக்கி விடப்படும் என தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்