முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஈராக்கில் வன்முறை - 41 பேர் பலி

புதன்கிழமை, 3 ஜூலை 2013      உலகம்
Image Unavailable

 

பாக்தாத், ஜூலை. 4 - ஈராக்கில் சன்னி மற்றும் ஷியா பிரிவு முஸ்லீம்களிடையே நிகழ்ந்த வன்முறையில் 41 பேர் உயிரிழந்தனர். ஈராக்கில் அடுத்த ஆண்டு பொதுத் தேர்தல்கள் நடைபெறவுள்ள நிலையில் அங்கு சிறுபான்மையினராக உள்ள சன்னி மற்றும் ஷியா பிரிவு முஸ்லீம்கள் இடையே மோதல்கள் நிகழ்ந்து வருகின்றன. பாக்தாத்தின் வடக்கு பகுதியில் தொடர் தாக்குதல் சம்பவங்கள் நிகழ்ந்தன. இந்த தாக்குதல்களில் 41 பேர் உயிரிழந்தனர் என்று ஈராக்கில் உள்ள ஐ.நா. குழு தெரிவித்துள்ளது. தற்கொலைப் படை பயங்கரவாதி நடத்திய தாக்குதலில் தான் அதிக உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. 

ஈராக் ராணுவ வீரர் ஒருவரின் உடலுக்கு இறுதி சடங்குகள் நடந்து கொண்டிருந்த போது கூட்டத்தினர் இடையே நின்றிருந்த தற்கொலை படை தீவிரவாதி தனது உடலில் கட்டியிருந்த வெடிகுண்டை வெடிக்க செய்தார். முக்தாதியா நகரில் நடந்த இந்த குண்டுவெடிப்பில் 23 பேர் கொல்லப்பட்டனர். 27 பேர் காயமடைந்தனர். உயிரிழந்தவர்களில் போலீஸ் அதிகாரி ஒருவரும் அடங்குவர். 

அருகில் உள்ள தியாலா மாகாணத்தின் தலைநகரான பகுபா நகரில் நிகழ்ந்த மற்றொரு குண்டுவெடிப்பில் பொதுமக்கள 10 பேர் உயிரிழந்தனர். 22 பேர் காயமடைந்தனர். வடக்கு பாக்தாத்தில் ராணுவ உடையணிந்த  ஆயுதமேந்திய கும்பல் ஒன்று சன்னி பிரிவை சேர்ந்த முன்னாள் பயங்கரவாதிகள் 8 பேரை அவர்களது வீடுகளில் இருந்து கடத்தி சென்றது. பின்னர் அவர்கள் அனைவரையும் அந்த கும்பல் சுட்டுக் கொன்றது. இந்த சம்பவத்துக்கு இது வரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. ஈராக்கில் கடந்த மூன்று மாதங்களாக நடைபெற்று வரும் வன்முறையில் 2,500 பேருக்கு மேல் உயிரிழந்துள்ளனர் என்று ஐ.நா. அறிக்கை தெரிவிக்கிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்