முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எகிப்தில் ராணுவ எச்சரிக்கையை புறக்கணித்தார் அதிபர்

புதன்கிழமை, 3 ஜூலை 2013      உலகம்
Image Unavailable

 

கெய்ரோ, ஜூலை. 4 - எகிப்தில் மக்கள் போராட்டத்துக்கு தீர்வு காணும்படி ராணுவம் விடுத்த 48 மணி நேர கெடுவரை அதிபர் முகமது மோர்ஸி புறக்கணித்தார். 

அவர் தனது திட்டப்படி நாட்டை மறுசீரமைப்பு செய்யும் பணிகளை தொடர்ந்து மேற்கொள்ளப் போவதாகவும் எந்த சூழ்நிலையிலும் நாடு பின்னோக்கி செல்ல அனுமதிக்க மாட்டார் என்றும் அவர் தெரிவித்துள்ளார். அதிபருக்கு எதிராக மக்கள் போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில் 48 மணி நேரத்துக்குள் இதற்கு தீர்வு காணாவிட்டால் ராணுவம் தலையிடும் என்று ராணுவ தரப்பில் அறிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

ராணுவத்தின் இது போன்ற அறிவிப்புகள் நாட்டை பிளவுபடுத்துவதுடன் சமூக அமைதியின்மைக்கும் வழிவகுத்து விடும் என்று அதிபர் மாளிகை வட்டாரம் தெரிவித்துள்ளது. அதிபருக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமரோடு அமைப்பின் நிறுவனர் மக்மூத்பாதிர் கூறுகையில், ராணுவத்தின் அறிவிப்புக்கு தலைவணங்குவதாகவும் இது நாட்டின் மீது ராணுவத்துக்கு உள்ள பறைசாற்றுவதாக உள்ளது என்று கூறியுள்ளார். இதனிடையே தான்சானியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு அதிபர் ஒபாமா எகிப்து விவகாரம் தொடர்பாக ஜனநாயக ரீதியில் பயணிக்கும் அந்நாடு அதே பாதையில் செல்ல துணை நிற்போம். அதன் அதிபர் எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதாகவும் அதே நேரம் மக்களின் எண்ணங்களுக்கும் மதிப்பு அளிப்பது அவசியம் என்றும் அவர் தெரிவித்ததாக அமெரிக்க அதிபர் மாளிகை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்